ரைட்ஸ் (RITES) ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் இன்ஜினியர் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 24.09.2024
Graduate Engineer Trainee
காலியிடங்களின் எண்ணிக்கை: 15
Mechanical Engineering – 10
Information Technology – 5
கல்வித் தகுதி: மெக்கானிக்கல் பிரிவுக்கு Bachelor’s Degree in Mechanical Engineering/ Technology in Mechanical/ Production/ Production & Industrial/ Manufacturing/ Mechanical/ Railways/ Mechatronics & Automobile படித்திருக்க வேண்டும்.
ஐ.டி பிரிவுக்கு Bachelor’s Degree in Computer Engineering/ Technology/ Computer Science/ Degree in Engineering in Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics & Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation / Post Graduate Degree in Electronics/ Electronics & Tele Communication/ Electronics & Communication/ Electronics & Instrumentation/ Computer Science/ Information Technology/ Computer Applications படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 14.27 லட்சம்
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கேட் தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://rites.com/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.09.2024
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 600, எஸ்.சி/ எஸ்.டி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ. 300
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://rites.com/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“