/indian-express-tamil/media/media_files/dvEygh2YyfOhpYeN0ISu.jpg)
நாடு முழுவதும் ரோஜ்கர் மேளா திட்டம் 46 இடங்களில் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மத்திய, மாநில அரசுகள் யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள் இந்திய அஞ்சல் துறை, இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறை, இந்திய அனுசரி துறை, இந்திய வருவாய்த்துறை, உயர்கல்வித் துறை, இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம், திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் போன்ற பல்வேறு துறைகளில் பணிபுரிவார்கள்.
கோவையில் அஞ்சல் துறை, வங்கி, இந்திய உணவுக் கழகம் போன்ற துறைகளில் புதிதாக பணியமர்த்தப்பட்ட 158 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வழங்கினார். ரோஜ்கர் மேளா வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஒரு உந்துதலாகவும் மற்றும் இளைஞர்களுக்கு அவர்களின் அதிகாரம் மற்றும் தேசிய வளர்ச்சியில் பங்கேற்பதற்கு வாய்ப்புகளை வழங்குகிறது.
பல்வேறு அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் கர்மயோகி கிராம பிராம்ப மூலம் இணையதளத்தில் தங்களை பயிற்றுவித்துக் கொள்ளும் வாய்ப்பை பெறுகின்றனர். அதில் 650-க்கும் மேற்பட்ட இணையதளப் பயிற்சிகளை எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த வித சாதனங்களின் மூலமாகவும் பயிலும் வாய்ப்பினையும் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், "பிரதமர் ரோஜ்கர் மேளா அரசு வேலை என்பது ஒவ்வொருவருக்கும் கனவு. 2022 ஆகஸ்ட் மாதம் ஒரு வருடத்தில் 10 லட்சம் பேர் அரசு வேலை தருவதாக பிரதமர் கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. 8-வது ரோஜ்கர் மேளாவில் 8 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கியுள்ளது. பா.ஜ.க தலைமையில் இருக்கும் இடங்களில் வேலை வாய்ப்பு வழங்கபட்டு வருகிறது.
டிஜிட்டல் இந்தியாவில் ஆதார் இணைக்கபட்டு 3 லட்சம் கோடி ரூபாயில் Infra Struture மத்திய அரசாங்கம் கொடுத்துள்ளது. அது போல் வந்தே பாரத் ரயில் சேவை,சந்திராயன் போன்ற விஷயங்களில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
2047-ம் ஆண்டு பாரத தேசம் பெருமளவில் வளர்ச்சியில் இருக்கும். 2014க்கு முன்பு 500 நிறுவனங்கள் இருந்தது. தற்போது 1 லட்சம் நிறுவனங்கள் உள்ளன. அதில் 30 வயது கீழ் உள்ள இளைஞர்கள் சி.இ.ஓ-வாக உள்ளனர். தொடர்ந்து மீனவர்கள் படகுகள் பிடிக்கபட்டு வருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் சார்பில் மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்டு வருகிறோம். 2014-க்கு முன்பு மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். அதன் பிறகு கொல்லப்படவில்லை".
மீனவர்களுக்காக பிரதமர் மோடி புதிய அமைச்சகத்தை உருவாகினார். பி.எம்.எஸ் திட்டத்தில் 20,000 கோடி ரூபாய் மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. படகிகள் மீனவர்களுக்கு 17,000 கோடிக்கு ("communication device") கொடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் விஷயத்தில் மிகவும் பாதுகாப்பாக மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.