ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் க்ரூப் இ, எஃப் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு

தேர்வெழுதியவர்களில் மொத்தம் 2,084 பேர் தேர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இரயில்வே பாதுகாப்பு சிறப்புப்படை கான்ஸ்டபிள்களுக்காக நடத்தப்பட்ட க்ரூப் இ மற்றும் எஃப் தேர்வு முடிவுகள், அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான constable1.rpfonlinereg.org -ல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வெழுதியவர்களில் மொத்தம் 2,084 பேர் தேர்ச்சியடைந்திருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்ததாக உடற்தகுதி தேர்வு நடக்கும், அதைத் தொடர்ந்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

அதோடு, உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்த்தலில் எஸ்.ஐ க்ரூப் இ பிரிவில் 424 பேரும், எஸ்.ஐ க்ரூப் எஃப் பிரிவில் 645 பேரும் தேர்வாகியிருக்கிறார்கள்.

ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் தேர்வு முடிவுகளை இப்படி பார்க்கலாம்

constable1.rpfonlinereg.org என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தை ’விசிட்’ செய்யவும்

முகப்பு பக்கத்தில் இருக்கும் RPF recruitment for the post of Constable 1/2018 என்பதை க்ளிக் செய்யவும்.

இப்போது இன்னொரு பக்கம் திறக்கும்

அதில் உங்களது ரோல் நம்பரை பதிவு செய்யவும்

அவ்வளவு தான் உங்களது முடிவு திரையில் தெரியும்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close