/indian-express-tamil/media/media_files/mnAiOEEFjCTGF94T7bO9.jpeg)
ரயில்வே பாதுகாப்பு படை வேலை வாய்ப்பு
ரயில்வே பாதுகாப்பு படையில் (Railway Protection Force) காலியாக சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மொத்தம் 452 எஸ்.ஐ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 14.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சப் இன்ஸ்பெக்டர் (Sub - Inspector)
காலியிடங்களின் எண்ணிக்கை: 452
ஆண்கள்: 384
பெண்கள்: 68
கல்வித் தகுதி : இந்த பதவிகளுக்கு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுத் தகுதி : 01.07.2024 அன்று 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 35,400
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination) மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கணினி வழி தேர்வு 120 மதிப்பெண்களுக்கு 90 நிமிட கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் பொது அறிவு (General Awareness) 50, திறனறிதல் (General Intelligence & Reasoning) 35, கணிதம் (Numerical Aptitude) 35 என மொத்தம் 120 கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250
விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.05.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.