/tamil-ie/media/media_files/uploads/2017/07/Exam-result.jpg)
jee advanced result,
Railway Board to Release RRB ALP, Technician CBT 2 Answer Key: ஆட்டோ லோக்கோ பைலட் மற்றும் டெக்னீஷியன்களை தேர்வு செய்ய, கம்ப்யூட்டர் சம்பந்தமான டெஸ்டின் விடைத்தாள்களை ஆர்.ஆர்.பி வெளியிட்டுள்ளது. ஜனவரி 21, 22 மற்றும் 23, 2019 ஆகிய தேதிகளில் இத்தேர்வு நடத்தப்பட்டது.
சில தொழில்நுட்ப கோளாறுகளால் குறித்த நேரத்தில் தேர்வை தொடங்கவோ/முடிக்கவோ முடியவில்லை. அதனால் சில மாணவர்களுக்கு பிப்ரவரிப் 8-ம் தேதியன்று மறுத்தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில் இத்தேர்வுக்கான விடைத்தாள்கள் இன்று வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக ஆர்.ஆர்.பி அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விடைத்தாள் குறித்த சந்தேகங்களுக்கு, ஆ.ஆர்.பி குழு கலந்தாலோசித்து, இறுதி மதிப்பெண் பட்டியலை வெளியிடும்.
எப்படி தெரிந்துக் கொள்வது?
பிரவுஸரை ஓபன் செய்யவும்.
உங்கள் மண்டலத்தில் இணையதள முகவரியை டைப் செய்து ஓகே கொடுக்கவும்.
புதிய முக பக்கம் திறக்கும்.
அதில் 'RRB ALP Technician answer key cbt 2' என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
இப்போது புதிய பக்கம் திறக்கும்.
வழிமுறைகளை கவனமாக படித்துவிட்டு, இறுதியில் இருக்கும் படி லாக் இன் செய்யவும்.
இப்போது RRB ALP Technician-ன் விடைத்தாள் திரையில் தோன்றும், அதை பார்த்துவிட்டு பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.
மதிப்பெண் தகுதி
குறைந்தபட்சம் 42 மதிப்பெண்கள் வாங்கியிருக்க வேண்டும்.
குறிப்பு
லோக்கோ பைலட் மற்றும் டெக்னீஷியன் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கணினியை அடிப்படையாகக் கொண்ட ஆப்டிட்யூட் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us