ரயில்வேயில் வேலை… நீங்கள் தயாரா? 10-ம் வகுப்பு முதல் பொறியியல் படிப்பு வரை தகுதி

southern railway recruitment notifications in rrbchennai.gov.in: தகுதி உள்ளவர்கள் ரயில்வேயில் உள்ள இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

By: Updated: January 28, 2019, 06:27:13 PM

RRB chennai je recruitment 2019 and upcoming Jobs in rrbchennai.gov.in: உலகின் அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் என்கிற பெருமை, இந்திய ரயில்வேக்கு உண்டு. தொடர்ந்து அவ்வப்போது தேர்வுகள் மூலமாக பணியிடங்களை நிரப்பி வருகிறது ரயில்வே துறை.

ரயில்வே பணி, பலரும் விரும்புகிற அரசுப் பணி. முழுமையாக தங்களை இந்தத் தேர்வுகளுக்கு தயார்படுத்தினால் வெற்றி சுலபம்தான். தற்போதைய சூழலில் ரயில்வேயில் என்னென்ன பணிகளுக்கு தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது? எந்தெந்த கல்வித் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்கிற விவரத்தை இங்கு காணலாம்.

RRB Recruitment 2019 For 14033 Junior Engineer (JE) Posts

இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் என்ஜினீயர் பதவிக்கு 13034 பேரும், ஜூனியர் என்ஜினீயர் (இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி) பதவிக்கு 49 பேரும், டெப்போட் மெட்டீரியல் சூப்பரிண்டெண்ட் பதவிக்கு 456 பேரும், கெமிக்கல் அண்ட் மெட்டாலஜிக்கல் அசிஸ்டண்ட் பதவிக்கு 494 பேரும் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

Read More: TNPSC Notifications 2019: பட்டதாரிகள், பொறியாளர்கள், டிப்ளமோ படித்தவர்கள்… அத்தனை பேருக்கும் தமிழ்நாடு அரசு வேலை

முதல் பதவிக்கு என்ஜினீயரிங் டிப்ளமோ/என்ஜினீயரிங் டிகிரி தகுதி பெற்றிருக்க வேண்டும். 2-வது பதவிக்கு PGDCA/B.Sc. (Computer Science)/ BCA / B.Tech. (Information Technology)/ B.Tech. (Computer Science)/ DOEACC ‘B’ Level Course of 3 years duration or equivalent from recognised university/ institute என்கிற கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

3-வது பதவிக்கு என்ஜினீயரிங் டிப்ளமோ/என்ஜினீயரிங் டிகிரி தகுதி பெற்றிருக்க வேண்டும். 4-வது பதவிக்கு இயற்பியல் அல்லது வேதியியல் பிரிவில் 45 சதவிகிதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்று பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு உள்ளிட்ட இதர முழுத் தகவல்களுக்கும் rrbchennai.gov.in என்கிற இணையதளத்தை பார்க்கலாம். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 2019, ஜனவரி 31-ம் தேதி கடைசி நாள்.

Railway Protection Force (RPF) Constable & Various Recruitment 2018

ரயில்வே பாதுகாப்புப் படையில் 798 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருக்கின்றன. பதவி வாரியாக காலியிடங்கள் வருமாறு: Constable (Water carrier) – 452, Constable (Safaiwala) – 199, Constable (Washerman) – 49, Constable (Barber) – 49, Constable (Mali) – 07, Tailor Gr. III – 20, Cobbler Gr.III – 22.

இந்தப் பணிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. விண்ணப்பிக்க கடைசி நாள் 2019, ஜனவரி 31. மேலும் முழு விவரங்களுக்கு rrbchennai.gov.in என்கிற இணையதளத்தை பார்க்கலாம்.

Northern Railway Scouts & Guides Quota Recruitment 2019

வடக்கு ரயில்வேயில் 19 இடங்களுக்கான காலியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. பதவிகள் விவரம் வருமாறு: Group ‘C’ – 03, Civil Engg, Mech, Elect & S&T – 16. இதில் முதல் பதவிக்கு 12-ம் வகுப்பில் 50 சதவிகிதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 2-வது பதவிக்கு 10-ம் வகுப்பு மற்றும் தேசிய அப்ரண்டிஷிப் சான்றிதழ் அல்லது உரிய பிரிவில் ஐடிஐ படித்தவர்கள் விண்ணபிக்க முடியும். மேலும் முழு விவரங்களுக்கு rrbchennai.gov.in என்கிற இணையதளத்தை பார்க்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 2019, ஜனவரி 31.

தகுதி உள்ளவர்கள் ரயில்வேயில் உள்ள இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Rrb chennai je recruitment 2019 upcoming jobs in rrbchennai gov in

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X