35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்கு ஆர்.ஆர்.பி கடந்த பிப்ரவரி மாதம் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அறிவிப்பை வெளிவந்தவுடன், ஒரு கோடிக்கும் அதிகமான தேர்வர்கள் இதற்காக விண்ணப்பித்திருந்தார்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 31 - ம் நாளாகும் .
ஆட்சேர்ப்பு செயல்முறை முதல்
ஸ்டேஜ் கணினி அடிப்படையிலான சோதனை (சிபிடி), இரண்டாவது ஸ்டேஜ் கணினி அடிப்படையிலான சோதனை , தட்டச்சு திறன் சோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு / மருத்துவ பரிசோதனை உள்ளடக்கியது என்று ஆர் ஆர் பி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருந்தது
முதல் ஸ்டேஜில் தேர்வடையும் மாணவர்கள் மட்டும் இரண்டாம் ஸ்டேஜ் தேர்வு அழைக்கப்படுவார்கள் என்பது குறிபிடத்தக்கது.
ஜூன் முதல் செப்டம்பர் இடைப்பட்ட நாட்களில் எப்போது வேண்டுமானாலும் இந்த முதல்
ஸ்டேஜ் கணினி அடிப்படையிலான சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆர்ஆர்பி யின் அறிவிப்பில் இருந்தது .
செப்டம்பர் மாதமே தற்போது முடிந்துள்ளது . ஆனால், தேர்வு குறித்த பெரிய மௌனத்தை சாதித்து வருகிறது.தேர்வுக்கான தேதி மற்றும் அட்மிட் கார்டு என இன்னும் எதையும் வெளியிடவில்லை .
இது மாணவர்கள் மத்தியில் பெரும் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஸ்டேஜ் 2, தட்டச்சு சோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு இந்த செயல்முறைகள் எல்லாம் நடந்தேற இன்னும் ஒரு வருடம் கூட ஆகலாம்.