/tamil-ie/media/media_files/uploads/2018/10/h1.jpg)
vit, vit results 2019, viteee result, வேலூர் வி.ஐ.டி
RRB ALP, Technician Result 2018 : ரயில்வே துறையின் குரூப் சி தேர்வு முடிவுகள் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட நான்கு வகை தேர்வுகள் மூலம், பணி நியமனம் செய்வதற்கான போட்டித்தேர்வுகள் ஏற்கனவே நடந்து முடிந்திருந்த நிலையில், இதன் முடிவுகள் வரும் அக்டோபர்31 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட குரூப் சி, ஆய்வக உதவியாளர், 64,371 லோகோ பைலட், 27,795 , தொழில்நுட்ப பிரிவில் 36,576 பணி இடங்களுக்கு தேர்வுகள் நடைப்பெற்றன.
RRB Group C ALP Loco Pilot and Technician Result 2018 : குரூப் சி தேர்வு முடிவுகள்!
இந்த தேர்வுக்கு 18 வயது முதல் 31 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 10ஆம் வகுப்பு அல்லது ஐடிஐயில் (NCVT/SCVT) படித்தவர்கள் இந்த தேர்வுகள் எழுத தகுதியானவர்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் கடந்த மாதங்களில் முறைப்படி தேர்வை எழுதி முடித்தனர்.
இந்த தேர்வு முடிவுகள் வரும் 31 ஆம்ட்தேதி வெளியாகிறது. மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியலையும் டிஎன்பிஸ்சி வெளியிடப்படும். தேர்வெழுதியவர்கள், டிஎன்பிஸ்சி இணையத்தில் முழுமையான விபரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு, அடுத்த இரு மாதங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.