RRB Group D Result : இந்தியன் ரயில்வே துறையில் குரூப் டி தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் (RRB) ரயில்வே குரூப் டி தேர்வு நாடு முழுவது நடத்தப்பட்டு வருகிறது.கடந்த வருடம் செப்டம்பர் 17ம் தேதி துவங்கி டிசம்பர் 17ம் தேதி வரை 1.89 கோடி, இந்திய ரயில்வேயில் காலியாக இருந்த பணியிடங்களுக்காக குரூப் டி தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதில் கலந்து கொண்டு தேர்வு எழுதியவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டுள்ளனர். மேலும் வினாத்தாள்கள் குறித்த ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை தெரிவிக்கலாம் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
RRB Group D Result 2018-19 Will Announce on Feb 13 : தேர்வு முடிவுகள் எப்போது?
ஆட்சேபனைகள் ஏதும் இல்லாத பட்சத்தில் இறுதி விடைகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். ஆட்சேபனைகள் தெரிவிக்க விரும்புபவர்கள் ஆங்கிலத்தில் தான் கேள்வி எழுப்ப வேண்டும் என்று கூறியிருந்தது ஆர்.ஆர்.பி.
இந்நிலையில், ஆர் ஆர் பி குரூப் டி தேர்வு முடிவுகள் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்வு வெளியாகும் முதல்நாள் இரவு அனைத்து பிராந்திய இணைய தளத்திலும் வெளியிடப்படும் என்று அங்கராஜ் மோகன் தெரிவித்துள்ளார். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உடல் தகுதி தேர்விற்கு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சேர்ந்த மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை (www.rrbchennai.gov.in) என்ற இணையதளத்தில் பார்க்க வேண்டும். தேர்வு முடிவுகளை பார்க்கும் வழிமுறை இங்கே.
1. ஆர்ஆர்பி அதிகாரப்பூர்வ இணையத்திற்கு செல்ல வேண்டும்.
2. விண்ணப்பதாரரின் பதிவென் இட வேண்டும்.
3. captcha code-யினை பதிவிட வேண்டும்.
4. இப்போது உங்கள் தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.