RRB Group D Exam Result 2018-19 to be Announced Today: ஆர்.ஆர்.பி குரூப் டி தேர்வு 2018, தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் அந்தந்த மண்டல வெப்சைட்டுகளில் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. சென்னை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் rrbchennai.gov.in என்ற தளத்தில் அவர்களது முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். ஆர்.ஆர்.பி குரூப் டி தேர்வு 2018 இந்திய ரயில்வேயில் உள்ள 62,907 காலியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் மொத்தம் 1.8 கோடி பேர் பங்கேற்றதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
இதில் பொதுப்பிரிவினருக்கு கட் ஆஃப் மதிப்பெண் 65-75 எனவும், இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு 60 எனவும் இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
தவிர, பலதரப்பட்ட கேட்டகரியில் ஆர்.ஆர்.பி-யில் மொத்தம் இரண்டரை லட்சம் காலியிடங்கள் உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்திருந்தார்.
RRB Railway group D result 2018-19: மொபைலில் எப்படி தெரிந்துக் கொள்வது?
நீங்கள் பயன்படுத்தும் பிரவுஸரை திறக்கவும்.
உங்கள் மண்டலத்தின் இணைய தள முகவரியை டைப் செய்து ’ஓகே’ கொடுக்கவும்.
அதில் RRB group D result என்பதை க்ளிக் செய்யவும்.
அப்போது புதிய பேஜ் திறக்கும்.
உங்களது அக்கவுண்டை லாக் இன் செய்யவும்.
உங்கள் தேர்வு முடிவு திரையில் தோன்று.
பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.
இத்தேர்வில் வெற்றியடைந்தவர்களுக்கு, உடற்தகுதித் தேர்வு, அதனைத் தொடர்ந்து சான்றிதழ்கள் சரிபார்த்தல் ஆகிய ப்ராசஸ் நடைபெறும். அனைத்தும் முடிந்ததும் இறுதியாக பணியமர்த்தப் படுவார்கள்.
தவிர, வெவ்வேறு மண்டலங்களில் இருந்து தேர்வெழுதியவர்கள் அந்தந்த மண்டலங்களின் அதிகாரப்பூர்வ ஆர்.ஆர்.பி தளத்தில் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.