/tamil-ie/media/media_files/uploads/2019/01/rrb-759-4.jpg)
RRB city intimation letter,mock test
ஆர்ஆர்பி அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் சிபிடி 2 வது கட்டத் தேர்வுக்கான தேர்வு நடக்கும் நகரத்தையும், தேர்வு தேதி தொடர்பான அறிவிப்பு கடிதத்தையும் காணும் வாய்ப்பை தேர்வர்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது . மேலும், சிபிடி 2 வது தேர்வுக்கான மாக் டெஸ்ட் இணைப்பையும் ஆர்ஆர்பி வெளியிட்டுள்ளது. ஜே.இ சிபிடி-2 தொடங்க இன்னும் பத்து நாட்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாக் டெஸ்ட் தேர்வளர்களுக்கு ஆன்லைன் தேர்வில் தயாராகுவது பற்றியும், பதில்களை எவ்வாறு சமர்ப்பிப்பது பற்றியுமான யோசனையைத் தரும். அனைவரும், தேர்வுக்கு வருவதற்கு முன்பு மாக் டெஸ்ட்டை கட்டாயம் முயற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேட்பாளர்கள் தங்கள் பிராந்திய ஆர்ஆர்பி- யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் அறிவிப்பு கடிதங்களை சரிபார்க்கலாம். அறிவிப்பு கடிதத்தில் தற்போது தேர்வு மையத்தின் நகரம் மட்டுமே இருக்கும். பின்னர் வெளியடப்படும் அட்மிட் கார்டில் தான் தேர்வு நடக்கும் மையத்தின் முழு விவரங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிடி 1 இன் முடிவுகள் ஏற்கனவே ஆகஸ்ட் 13, 2019 அன்று அறிவிக்கப்பட்டுள்ளன. சிபிடி 2 வது கட்டம் ஆகஸ்ட் 28 முதல் 2019 செப்டம்பர் 1 வரை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது .
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.