இந்திய ரயில்வேயில் 8,850 பணியிடங்கள்: சம்பளம்: Rs.35,400 தகுதி +2, ஏதாவது ஒரு டிகிரி!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8 ஆயிரத்து 850 பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்விதகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8 ஆயிரத்து 850 பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்விதகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

author-image
Meenakshi Sundaram S
New Update
southern-railway-

இந்திய ரயில்வேயில் 8850+ பணியிடங்கள்: சம்பளம்: Rs.35,400; தகுதி +2, ஏதாவது ஒரு டிகிரி!

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Board) மூலம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரிவுகளில் 8 ஆயிரத்து 850 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது. நிலையான மத்திய அரசு வேலைக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் என தனித்தனியாகப் பதவிகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.

Advertisment

பட்டதாரி நிலை பதவிகள் (Graduate Level Posts)

பட்டப்படிப்பை (Any Degree) முடித்தவர்களுக்காக மொத்தம் 5 ஆயிரத்து 800 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஸ்டேஷன் மாஸ்டர், கூட்ஸ் டிரெயின் மேனேஜர் போன்ற மதிப்புமிக்க பதவிகள் இதில் அடங்கும். இந்தப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆரம்ப சம்பளமாக மாதம் ரூ.25,500 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும்.

மொத்த காலியிடங்கள்: 5,800

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

பதவிகள்: Chief Commercial – Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant, Senior Clerk – Typist, Traffic Assistant.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: அக்டோபர் 21, 2025

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 20, 2025

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்  (அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு)

Advertisment
Advertisements

12 ஆம் வகுப்பு நிலை பதவிகள் (Undergraduate Level)

12-ம் வகுப்பு (+2) தேர்ச்சி பெற்றவர்களுக்காக மொத்தம் 3 ஆயிரத்து 50 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பதவிகளுக்கான ஆரம்ப சம்பளம் மாதம் ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை இருக்கும்.

மொத்த காலியிடங்கள்: 3,050

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

பதவிகள்: Commercial – Ticket Clerk, Accounts Clerk – Typist, Junior Clerk – Typist, Trains Clerk

விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: அக்டோபர் 28, 2025

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 27, 2025

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும் (அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு)

விண்ணப்பக் கட்டணம்

தேர்வர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், முதல் நிலை கணினி வழித் தேர்வில் (CBT-1) பங்கேற்ற பிறகு, கட்டணத்தின் ஒரு பகுதி (அ) முழுத் தொகையும் வங்கி கணக்கிற்கு நேரடியாகத் திரும்ப வழங்கப்படும். இது தேர்வை எழுத ஊக்குவிக்கும் சிறந்த முயற்சியாகும்.

பொதுப் பிரிவினர்: விண்ணப்பக் கட்டணம் ரூ.500. இதில் ரூ.400 தேர்வு எழுதிய பிறகு திரும்ப அளிக்கப்படும்.

எஸ்.சி/எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர்: விண்ணப்பக் கட்டணம் ரூ.250. இந்த முழுத் தொகையும் தேர்வு எழுதிய பிறகு திரும்ப அளிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் பல கட்டத் தேர்வுகளின் அடிப்படையில், முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதல் நிலை கணினி வழித் தேர்வு (CBT-1): இது தகுதித் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள்.
2-ம் நிலை கணினி வழித் தேர்வு (CBT-2): இது பதவிகளுக்கு ஏற்ப மாறுபடும். இதில் பெறும் மதிப்பெண்கள் இறுதிப் பட்டியலுக்கு முக்கியம்.

தட்டச்சுத் திறன் தேர்வு / CBAT: டைப்பிஸ்ட் பதவிகளுக்குத் தட்டச்சுத் திறனும், ஸ்டேஷன் மாஸ்டர் போன்ற பதவிகளுக்கு CBAT (Computer-Based Aptitude Test) தேர்வும் நடத்தப்படும்.

ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை: இறுதி நிலையில், தேர்வர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, ரயில்வேயின் மருத்துவத் தகுதிகள் சோதிக்கப்படும். இது ஆர்.ஆர்.பி. என்.பி.டி.சி. (Non-Technical Popular Categories) ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பாகும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

indian railway Educational News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: