RRB RRC NTPC Notification Released @rrbchennai.gov.in: என்.டி.பி.சி, குரூப் டி ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நேற்றைய வேலைவாய்ப்பு செய்தி தாளில் வெளியிட்டுள்ளது.
இதற்கான நோட்டிஃபிகேஷன் வரும் 28-ம் தேதி ஆர்.ஆர்.பி தளத்தில் வெளியிடப்படும். ரயில்வேயில் NTPC-யில் பணிபுரிய விரும்புவோர், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.
NTPC மற்றும் குரூப் டி ஆகியவற்றிற்கான ஆட்சேர்ப்பு செயல்முறை ஒன்று தான். கணினியை அடிப்படையாகக் கொண்ட தேர்வு முறை, ஃபிசிக்கல் எண்டூரன்ஸ், ஃபிசிக்கல் மெஸர்மெண்ட் மற்றும் ஆவணங்கள் சரிபார்த்தல் ஆகியவைகள் இதில் அடங்கியுள்ளன.
”என்.டி.பி.சி பிரிவில் சேர விரும்புவோம் வரும் 28-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் கிளர்க் மற்றும் டைபிஸ்ட், அக்கவுண்ட்ஸ் கிளர்க் மற்றும் டைபிஸ்ட், ரயில் கிளர்க், கமர்ஷியல் மற்றும் டிக்கெட் கிளர்க், டிராஃபிக் அசிஸ்டெண்ட், கூட்ஸ் கார்டு, சீனியர் கமர்ஷியல் மற்றும் டிக்கெட் கிளர்க், சீனியர் கிளர்க் மற்றும் டைபிஸ்ட், ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டெண்ட் மற்றும் டைபிஸ்ட், கமர்ஷியல் அப்ரண்டிஸ், ஸ்டேஷன் மாஸ்டர் ஆகிய பணிகள் இதில் அடங்கும்” என ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
RRB NTPC, Group D recruitment 2019: காலியிட விபரங்கள்
மொத்த காலியிடம் - 1,30,000
Non-Technical Popular Categories (NTPC) - 30,000
குரூப் டி, லெவல் 1 - 1,00,000
தகுதி
என்.டி.பி.சி - விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சமாக மேல்நிலைக் கல்வியை முடித்திருக்க வேண்டும்.
குரூப் டி, லெவல் 1 - குறைந்தபட்சமாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது
ஜூலை 1, 2019-ன் படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இருப்பினும், சமூக ரீதியிலான சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
பொது பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.250.
எப்படி விண்ணப்பிப்பது?
வரும் 28-ம் தேதி, www.rrbchennai.gov.in என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.