Advertisment

RRB NTPC Recruitment 2019: ஆர்.ஆர்.பி, என்.டி.பி.சி தேர்வுக்கான விண்ணப்பம் வெளியீடு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
RRB NTPC Registration 2019, exam date and admit card news

RRB NTPC Registration 2019, exam date and admit card news

RRB NTPC Recruitment Registration Begins Today: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், 35,277 காலியிடங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது. கம்ப்யூட்டரை அடிப்படையாகக் கொண்ட முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Advertisment

indianrailways.gov.in என்ற இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ தளத்தைத் தவிர, மண்டல வாரியான ஆர்.ஆர்.பி-யின் தளங்களிலும் இத்தேர்வுக்கு அப்ளை செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி, மார்ச் 31, 2019. இருப்பினும் ஏப்ரல் 5-ம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம்.

RRB NTPC recruitment 2019: காலியிட விபரங்கள் 

நான் டெக்னிக்கல் பாப்புலர் கேட்டகரியில் (NTPC) 35,277 காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் குறைந்தது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாரா மெடிக்கலுக்கு, மருத்துவ அறிவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

ஜூலை 1, 2019-ன் படி விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத் திறனாளிகளுக்கு வயது தளர்வு உண்டு.

எப்படி அப்ளை செய்வது?

அதிகாரப்பூர்வ தளத்தை விசிட் செய்துக் கொள்ளவும்.

முகப்பு பக்கத்தின் மேலே இருக்கும், NTPC registration என்பதை க்ளிக் செய்யவும்.

தனித் தகவலை பதிவிடவும்.

புதிய பதிவெண்ணைப் பயன்படுத்தி, லாக் இன் செய்துக் கொள்ளவும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சான்றிதழ்களை பதிவேற்றவும்.

பணம் செலுத்தவும்.

 

Indian Railways
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment