RRB NTPC 2024: ரயில்வே வேலை; 8,113 பணியிடங்கள்; விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

RRB NTPC 2024: இந்திய ரயில்வே வேலை வாய்ப்பு; 8,113 பணியிடங்கள்; டிகிரி தகுதி; தேர்வு முறை, சம்பள முறை என்ன? முழு விபரம் இங்கே

RRB NTPC 2024: இந்திய ரயில்வே வேலை வாய்ப்பு; 8,113 பணியிடங்கள்; டிகிரி தகுதி; தேர்வு முறை, சம்பள முறை என்ன? முழு விபரம் இங்கே

author-image
WebDesk
New Update
Indian Railways on General coaches cut down Tamil News

RRB NTPC 2024: இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், கூட்ஸ் டிரெயின் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 8,113 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

NTPC Vacancy

காலியிடங்களின் எண்ணிக்கை: 8,113

காலியிடங்களின் விபரம்

Chief Commercial – Ticket Supervisor – 1736 

Station Master – 994  

Goods Train Manager – 3144 

Junior Account Assistant – Typist – 1507  

Senior Clerk – Typist – 732 

கல்வித் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு டிகிரி படித்திருக்க வேண்டும். 

Advertisment

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.01.2025 அன்று 18 வயது முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. 

சம்பளம்

Chief Commercial – Ticket Supervisor – 35,400 

Station Master – 35,400

Goods Train Manager – 29,200 

Junior Account Assistant – Typist – 29,200 

Senior Clerk – Typist – 29,200 

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு 2 நிலைகளில் தேர்வு நடத்தப்படும். முதல்நிலை கணினி வழித் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இரண்டாம் நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாம் நிலை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.10.2024

Advertisment
Advertisements

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Indian Railways Jobs Southern Railway

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: