இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், அசிஸ்டெண்ட், கிளர்க் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 30307 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.09.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
NTPC Vacancy
காலியிடங்களின் எண்ணிக்கை: 30307
காலியிடங்களின் விபரம்
Chief Commercial – Ticket Supervisor – 6235
Station Master – 5623
Goods Train Manager – 3562
Junior Account Assistant – Typist – 7520
Senior Clerk – Typist – 7367
கல்வித் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு டிகிரி படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: டிகிரி தகுதி பணியிடங்களுக்கு 01.01.2025 அன்று 18 வயது முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்
Chief Commercial – Ticket Supervisor – 35,400
Station Master – 35,400
Goods Train Manager – 29,200
Junior Account Assistant – Typist – 29,200
Senior Clerk – Typist – 29,200
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு 2 நிலைகளில் தேர்வு நடத்தப்படும். முதல்நிலை கணினி வழித் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இரண்டாம் நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாம் நிலை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்குகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.09.2025
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
/indian-express-tamil/media/post_attachments/52f2f02d-ec7.jpg)