Advertisment

RRB Paramedical 2019: பாரா மெடிக்கல் படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு!

மொத்தம் 1937 காலியிடங்களில் சென்னை ரயில்வே வாரியத்துக்கு 173 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilnadu jobs

jobs

RRB Paramedical 2019: பாராமெடிக்கல் படித்தவர்களுக்கு ரயில்வேயில் 1937 காலியிடங்கள் இருப்பதாக ஆர்.ஆர்.பி அறிவித்துள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் rrbchennai.gov.in தளத்தில் விண்ணப்பிக்கவும்.

Advertisment

காலியிட விபரங்கள் 

டயட்டீஷியன் - 04

ஸ்டாஃப் நர்ஸ் - 1109

டெண்டல் ஹைஜீனிஸ்ட் - 05

டயாலிஸிஸ் டெக்னீஷியன் - 20

எக்ஸ்டென்சன் எஜுகேட்டர் - 11

ஹெல்த் அண்ட் மலேரியா இன்ஸ்பெக்டர் - 289

லேப் சூப்பிரண்டு - 25

பெர்ஃப்யூஸனிஸ்ட் - 01

பிஸியோதெரபிஸ்ட் - 21

ஃபார்மஸிஸ்ட் - 277

ரேடியோ கிராஃபர் - 21

ஸ்பீச் தெரபிஸ்ட் - 01

இ.சி.ஜி டெக்னீஷியன் - 23

லேடி ஹெல்த் விசிட்டர் - 02

லேப் அசிஸ்டெண்ட் - 82

ஆக மொத்தம் 1937 காலியிடங்களில் சென்னை ரயில்வே வாரியத்துக்கு 173 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

01.07.2019 தேதியின் படி, விண்ணப்பதாரருக்கு 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி

குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு, அந்தந்த துறைகளில் டிகிரி அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் 

பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.250.

விண்ணப்பிக்க விரும்புவோர்  rrbchennai.gov.in தளத்தை லாக் இன் செய்து விண்ணப்பிக்கவும்.

Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment