Advertisment

இந்திய ரயில்வேயில் 2.65 லட்சம் காலியிடங்கள்: தெற்கு ரயில்வேயில் மட்டும் எத்தனை தெரியுமா?

ரயில்வேயில் 2.65 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 9661 பணியிடங்கள் உள்ளன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Railway Recruitment Board, RRB, RRB, CBT, 1st Stage Computer Based Test result date announced, ரயில்வே பணியாளர் தேர்வாணையம், தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு, முதல்நிலை தேர்வு முடிவுகள், ரயில்வே தேர்வு முடிவுகள், ஆர்ஆர்பி, CBT 2 Exam Date, Non Technical Popular Category, RRB result date, RRB result

RRB zone wise new vacancy list in tamil: ரயில்வேயில் 2.65 லட்சம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

ராஜ்யசபாவில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ள சமீபத்திய தகவலின்படி, இந்திய ரயில்வேயில் 2,177 கெஜட்டட் பணியிடங்கள் மற்றும் 2,63,370 கெஜட்டட் அல்லாத பணியிடங்கள் உட்பட 2,65,547 பணியிடங்கள் காலியாக உள்ளன. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த பணியிடங்களை நிரப்புவது நிச்சயம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்க உதவும் என்பதால் ரயில்வே துறையினர் ஆட்சேர்ப்பு செயல்முறையை துரிதப்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்: தேசிய கடற்கரை மேலாண்மை மைய வேலைவாய்ப்பு; 10th, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ரயில்வேயில் (RRB) மண்டல வாரியாக காலியாக உள்ள பணியிடங்கள் விவரம்

மத்திய ரயில்வே: கெஜட்டட் 56 காலியிடங்கள் மற்றும் கெஜட்டட் அல்லாதவை 27,177

கிழக்கு கடற்கரை ரயில்வே: கெஜட்டட் 87 மற்றும் கெஜட்டட்  அல்லாதவை 8,447

கிழக்கு மத்திய ரயில்வே: கெஜட்டட் காலியிடங்கள் 170 மற்றும் கெஜட்டட் அல்லாதவை 15,268

கிழக்கு ரயில்வே: கெஜட்டட் காலியிடங்கள் 195 மற்றும் கெஜட்டட் அல்லாதவை 28,204

மெட்ரோ இரயில்வே: கெஜட்டட் காலியிடங்கள் 22 மற்றும் கெஜட்டட் அல்லாதவை 8,056

வட மத்திய ரயில்வே: கெஜட்டட் 141 கெஜட்டட் மற்றும் அல்லாதவை 9,366

வடகிழக்கு இரயில்வே: கெஜட்டட் 62 காலியிடங்கள் மற்றும் கெஜட்டட் அல்லாதவை 14,231

வடகிழக்கு எல்லை ரயில்வே: கெஜட்டட் 112 காலியிடங்கள் மற்றும் கெஜட்டட் அல்லாதவை 15,677

வடக்கு ரயில்வே: கெஜட்டட் காலியிடங்கள் 115 மற்றும் கெஜட்டட் அல்லாதவை 37,436

வடமேற்கு ரயில்வே: கெஜட்டட் 100 மற்றும் கெஜட்டட் அல்லாதவை 15,049 காலியிடங்கள்.

தெற்கு மத்திய ரயில்வே: கெஜட்டட் 43 காலியிடங்கள் மற்றும் கெஜட்டட் அல்லாதவை 16,741

தென்கிழக்கு மத்திய இரயில்வே: கெஜட்டட் 88 காலியிடங்கள் மற்றும் கெஜட்டட் அல்லாதவை 9.422 காலியிடங்கள்

தென்கிழக்கு இரயில்வே: கெஜட்டட் 137 காலியிடங்கள் மற்றும் கெஜட்டட் அல்லாதவை 16,847 இடங்கள்

தெற்கு ரயில்வே: கெஜட்டட் காலியிடங்கள் 161 மற்றும் கெஜட்டட் அல்லாதவை 9,500 காலியிடங்கள்

தென் மேற்கு ரயில்வே: கெஜட்டட் காலியிடங்கள் 65 மற்றும் கெஜட்டட் அல்லாதவை 6,525

மேற்கு மத்திய ரயில்வே: கெஜட்டட் 59 காலியிடங்கள் மற்றும் கெஜட்டட் அல்லாதவை 11,073

மேற்கு ரயில்வே: கெஜட்டட் காலியிடங்கள் 172 மற்றும் கெஜட்டட் அல்லாதவை 26,227

மற்ற பிரிவுகள்:  507 கெஜட்டட் மற்றும் கெஜட்டட் அல்லாதவை 12,760 காலியிடங்கள்

மேற்கண்ட விவரங்களில் காலியிடங்கள் உள்ளதாக ரயில்வே அமைச்சர் கூறினார். காலியிடங்கள் ஏற்படுவதும் நிரப்புவதும் தொடர்ச்சியான செயல் என்றும், செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு முகவர்களுடன் ரயில்வே இணைந்து காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

இதில் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில், 161கெஜட்டட் காலியிடங்களும் 9,500 கெஜட்டட் அல்லாத காலியிடங்களும் உள்ளன.

இதற்கிடையில், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மின்னஞ்சல் வழியாக 2 லட்சம் குறை தெரிவிக்கும் மனுக்களை பெற்றுள்ளது. சமீபத்தில், RRB NTPC CBT-1 தேர்வு முடிவுகள் மற்றும் குரூப் டி பதவிகள் மீதான விண்ணப்பதாரர்களின் கவலைகளை ஆராய இந்திய ரயில்வே உயர் அதிகாரக் குழுவை அமைத்துள்ளது. ஜனவரி 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்களால் (RRBs) வெளியிடப்பட்ட தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகளின் (NTPC) மையப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு CEN 01/2019 இன் முதல் நிலை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முடிவுகள் தொடர்பாக விண்ணப்பதாரர்கள் எழுப்பிய கவலைகள் மற்றும் சந்தேகங்களை தீர்க்க குறைதீர்ப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.  

விண்ணப்பதாரர்கள் தங்கள் குறைகளை பிப்ரவரி 16, 2022 வரை சமர்ப்பிக்கலாம். மேலும் இந்தக் குறைகளை ஆராய்ந்த பின்னர் குழு தனது பரிந்துரைகளை 4 மார்ச் 2022க்குள் சமர்ப்பிக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Southern Railway Rrb
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment