தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்க இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

22-04-2019 முதல் 18-05-2019 வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

RTE Online Applications Form :  குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி (Right of Children to Free and Compulsory Education (RTE) Act) உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் மாணவர்களுக்கு இலவச கல்வியை தர வேண்டும்.

சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில், இந்த சட்டத்தின் கீழ் எல்.கே.ஜி மற்றும் 1ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

RTE Online Applications Form – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இன்று துவங்கி (22/04/2019) மே மாதம் 18ம் தேதி (18/05/2019) வரை பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் என்று மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

//rte.tnschools.gov.in/tamil-nadu – இந்த இணையத்திற்கு சென்று நீங்கள் விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்யலாம். 2013ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த உரிமைச் சட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

மேலும் இது குறித்த விளம்பரப் பலகைகளை பள்ளி நிறுவனங்கள் தங்களின் பள்ளி முன்பு வைக்க வேண்டும் என்றும், மாணவர்கள் இந்த இட ஒதுக்கீட்டினை பெற பள்ளிக்கு 1 கி.மீ சுற்றளவில் தான் வசிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close