Advertisment

இந்திய மாணவர்களுக்கு 5000 எம்.பி.பி.எஸ் இடங்கள் ஒதுக்கீடு; கோவையில் ரஷ்ய அதிகாரிகள் தகவல்

இந்தியாவில் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளும் உரிமம் பெற தகுதியுடையதாக இருக்கும் வகையில் அனைத்து விதிமுறைகளையும் ரஷ்ய பல்கலைக்கழகங்கள் பின்பற்றி வருகின்றன; கோவையில் ரஷ்ய அதிகாரிகள் பேட்டி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Russia officials

கோவையில் ரஷ்ய கல்வி அதிகாரிகள் பேட்டி அளித்தனர்

மருத்துவம் தொடர்பான கல்வி பயில இந்திய மாணவர்களுக்கென ரஷ்யாவில் 5 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய நாட்டு கல்வி அதிகாரிகள் கோவையில் தெரிவித்துள்ளனர்.

Advertisment

ரஷ்யா நாட்டில் சென்று இந்திய மாணவர்கள் எம்.பி.பி.எஸ்.உள்ளிட்ட மருத்துவம் தொடர்பான கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான கூடுதல் தகவல்களை மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக கோவையில், ரஷ்ய கல்வி கண்காட்சி வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய பல்கலைகழகங்கள் இந்த கல்வி கண்காட்சியில் பங்கு பெற உள்ளனர்.

இதையும் படியுங்கள்: NEET Counselling: விரைவில் நீட் கவுன்சிலிங்; மாணவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் இங்கே

இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கண்காட்சி நடைபெற உள்ள கிராண்ட் ரீஜென்ட் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில் அயல்நாட்டு மாணவர் சேர்க்கை பிரிவின் மேலாண் இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் ரஷ்ய நாட்டு பல்கலைக்கழக பேராசிரியை சாரா பல்சேவா எலினா, மாணவர் சேர்க்கை பிரிவு அதிகாரி சிலோவா எக்கத்திரினா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.

publive-image

அப்போது அவர்கள் கூறியதாவது, ரஷிய பல்கலைக்கழகங்களில் படித்து முடிக்கும் இந்திய மாணவர்கள் தங்கள் சொந்த நாட்டில் மருத்துவம் பார்ப்பதற்கு, அவர்கள் பெறும் பட்டங்களுக்கு மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் கட்டாயமாக இருக்கிறது, வெளிநாடுகளில் வழங்கப்படும் மருத்துவப்பட்டம், இந்தியாவில் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளும் உரிமம் பெற தகுதியுடையதாக இருக்கும் வகையில் அனைத்து விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் ரஷ்ய பல்கலைக்கழகங்கள் பின்பற்றி வருகின்றன.

எனவே இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு ரஷ்யாவை முதன்மையாக தேர்வு செய்யலாம். இதற்காக 5 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு ரஷ்ய கல்வி நிறுவனங்களில் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ’பிளஸ்-2’ அல்லது அதற்கு இணையான படிப்புகளில் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து கூடுதல் தகவல்களை வழங்கும் வகையில் ரஷ்ய பல்கலைகழகங்கள் பங்கேற்கும் கண்காட்சி வரும் 23 ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet Russia Coimbatore Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment