மத்திய அரசின் கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சாகித்ய அகாடமி அமைப்பில் பல்வேறு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 04.02.2024
Publication Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் Diploma in Printing படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35,400 - 1,12,400
Sales-cum Exhibition Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35,400 - 1,12,400
Technical Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் Diploma in Book Publishing. படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35,400 - 1,12,400
Proof Reader cum General Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25,500 - 81,100
Receptionist cum-Telephone Operator
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25,500 - 81,100
Junior Clerk
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,900 - 63,200
Multi Tasking Staff
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. .18000 - 56900
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://sahitya-akademi.gov.in/pdf/Application-2024.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35 Ferozeshah Road, New Delhi-110001
விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.02.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://sahitya-akademi.gov.in/pdf/VariousPosts-2024.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“