scorecardresearch

TNPSC Group 1 Exam: குரூப் 1 முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற 100 பேருக்கு ஸ்காலர்ஷிப்; 3 மாதம் சிறப்பு பயிற்சி- சைதை துரைசாமி

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற 100 பேருக்கு ரூ.10,000 வரை ஸ்காலர்ஷிப் மற்றும் மெயின்ஸ் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என சென்னை முன்னாள் மேயர், மனித நேயம் ஐ.ஏ.எஸ் அகாடமி தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

பிரதிநிதித்துவ படம்
பிரதிநிதித்துவ படம்

தமிழ்நாடு அரசு சார்ந்த பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு நடத்தப்பட்டு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. பல்வேறு அரசு துறை வேலைகளுக்கு குரூப் 1, குரூப் 4 என மொத்தம் 8 வகைகளில் தேர்வு நடத்தப்படுகிறது.

அந்த வகையில் குரூப் 1 தேர்வு துணை ஆட்சியர். மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் எனப் பல்வேறு உயர் பதவிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று பிரிவு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில் குரூப் 1 பிரிவில் காலியாக இருந்த 92 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 92 பணியிடங்களுக்கு சுமார் 2 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. 2 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் 2,162 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை முதன்மை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை முன்னாள் மேயர், மனித நேயம் ஐ.ஏ.எஸ் அகாடமி தலைவர் சைதை துரைசாமி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “டிஎன்பிஎஸ்சி குரூப் I முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 100 பேருக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை மற்றும் மே இரண்டாவது வாரம் முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை 3 மாத காலம் முதன்மைத் தேர்வுக்கு தயராவதற்கான சிறப்பு பயிற்சி வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.

மனித நேயம் ஐஏஎஸ் அகாடமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “100 பேர் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு, 3 மாத காலம் மெயின்ஸ் தேர்வுக்கு தயாராவதற்கான இலவசப் பயிற்சி அளிக்கப்படும். முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி மே இரண்டாவது வாரத்தில் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரத்தில் முடிவடையும். விவரங்களுக்கு 044-24358373, 044-24330095, 9940069739 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Saidai duraisamy announces rs 10000 scholarship for candidates who have cleared tnpsc group i prelims