Advertisment

SAIL Recruitment 2022; செயில் நிறுவனத்தில் 333 பணியிடங்கள்; ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

செயில் நிறுவனத்தில் 300 க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்- தகுதி அளவுகோல்களை சரிபார்க்கவும், கடைசி தேதி இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SAIL Recruitment 2022; செயில் நிறுவனத்தில் 333 பணியிடங்கள்; ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய எஃகு ஆணையத்தில் நிர்வாக அலுவலர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 333 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Advertisment

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் ரூர்கேலா கிளையில் இன்ஜினியரிங், டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.09.2022 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்: SSC CGL 2022: மத்திய அரசில் 20,000க்கும் அதிகமான பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Asst. Manager (Safety)

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E./B.Tech படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.09.2022 அன்று 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 50,000–3%–1,60,000

Operator-cum Technician (Boiler Operator)

காலியிடங்களின் எண்ணிக்கை : 39

கல்வித் தகுதி: Diploma in Engineering மற்றும் Boiler Attendant Certificate of Competency படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.09.2022 அன்று 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 26600-3%-38920

Mining Foreman

காலியிடங்களின் எண்ணிக்கை : 24

கல்வித் தகுதி: Diploma in Mining படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.09.2022 அன்று 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 26600-3%-38920

Surveyor

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி: Diploma in Mining or Diploma in Mining & Mines’ Survey படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.09.2022 அன்று 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 26600-3%-38920

Mining Mate

காலியிடங்களின் எண்ணிக்கை : 55

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Mines’ Mate Certificate of Competency சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.09.2022 அன்று 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25070-3%-35070

Fire Operator (Trainee)

காலியிடங்களின் எண்ணிக்கை : 25

கல்வித் தகுதி: டிகிரி அல்லது டிப்ளமோ படிப்புடன் தீ அணைப்பு தொழில்நுட்ப சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.09.2022 அன்று 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 16,100

Fireman-cum-Fire Engine Driver (Trainee)

காலியிடங்களின் எண்ணிக்கை : 36

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.09.2022 அன்று 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,900

Attendant-cum Technician (Trainee) (HMV)

காலியிடங்களின் எண்ணிக்கை : 30

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.09.2022 அன்று 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,900

Operator-cum-Technician (Trainee)

காலியிடங்களின் எண்ணிக்கை : 80 (Mechanical – 15, Metallurgy – 15, Civil – 5, Electrical – 40, Electronics & Telecommunication - 5)

கல்வித் தகுதி: Diploma in Engineering in Mechanical/ Metallurgy/ Civil/ Electrical/ Electronics/ Electronics & Telecommunication படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.09.2022 அன்று 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 16,100

Attendant-cum-Technician (Trainee)

காலியிடங்களின் எண்ணிக்கை : 31 (Fitter – 9, Electrician – 10, Machinist - 12)

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.09.2022 அன்று 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,900

வயது வரம்பு தளர்வு: இருப்பினும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://sailcareers.com/secure?app_id=UElZMDAwMDAwMQ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : Asst. Manager (Safety)  பணியிடங்களுக்கு பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.700 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.200.

Operator-cum-Technician (Boiler Optr), Mining Foreman, Surveyor, Fire Operator (Trainee) & Operator-cum-Technician (Trainee) பணியிடங்களுக்கு பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.500 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150.

Mining Mate, Attendant-cum-Technician (Trainee), Fireman-cum-Fire Engine Driver (Trainee) &Attendant-cum-Technician (Trainee) (HMV) பணியிடங்களுக்கு பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.300 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.09.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ucanapplym.s3.ap-south-1.amazonaws.com/sail/pdf/ADVT%2001_2022_TECHNICAL2222.pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment