SAIL Jobs; செயில் நிறுவனத்தில் 92 பணியிடங்கள்; பி.இ/பி.டெக் படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

இந்திய எஃகு நிறுவனத்தில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 92 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய எஃகு நிறுவனத்தில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 92 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
sail jobs

இந்திய எஃகு நிறுவனத்தில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு

தமிழகத்தின், சேலம் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய எஃகு நிறுவனத்தில் (Steel Authority of India) இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

இந்திய பொதுத்துறை நிறுவனமான செயில் நிறுவனத்தில், மேனேஜ்மெண்ட் டிரெய்னி நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். மொத்தம் 92 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசி தேதியாகும்.

Management Trainee

காலியிடங்களின் எண்ணிக்கை: 92

Chemical Engineering - 3

Civil Engineering – 3

Electrical Engineering - 26

Instrumentation Engineering - 7

Mechanical Engineering - 34

Metallurgy Engineering - 5

Mining Engineering – 14

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 31.12.2023 அன்று 31 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ ST பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 50,000 – 1,60,000

Advertisment
Advertisements

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://sailcareers.com/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 700. எஸ்.சி/ எஸ்.டி/ மாற்றுதிறனாளிகள்/ முன்னாள் இராணுவத்தினர் பிரிவினருக்கு ரூ.200

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2023

மேலும் விவரங்களுக்கு https://d1cmkr5tdoeyjk.cloudfront.net/sail/pdf/Detailed%20Advt.-SRD.pdfஎன்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: