Advertisment

SAIL Jobs; செயில் நிறுவனத்தில் 46 பணியிடங்கள்; ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

இந்திய எஃகு நிறுவனத்தில் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 46 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
sail jobs

இந்திய எஃகு நிறுவனத்தில் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய எஃகு நிறுவனத்தில் (Steel Authority of India) ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 46 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Attendant-cum-Technician (Trainee)

காலியிடங்களின் எண்ணிக்கை: 40

Fitter -6

Electrician – 12

Turner – 3

EOT Crane Operator - 9

Welder – 5

Heavy Vehicle Driver - 5

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிரைவர் பணியிடங்களுக்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 25070-3%-35070/-

Operator-cum-Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: Diploma in Mechanical or Electrical or Chemical or Power Plant or Production or Instrumentation Engineering படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 26600-3%-38920/-

Attendant-cum-Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: முதல் வருடம் ரூ. 12,900 இரண்டாம் வருடம் ரூ. 15,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://sail.ucanapply.com/otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 300 - 500. எஸ்.சி/ எஸ்.டி/ மாற்றுதிறனாளிகள்/ முன்னாள் இராணுவத்தினர் பிரிவினருக்கு ரூ.100 - 150

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.01.2024

மேலும் விவரங்களுக்கு https://d1cmkr5tdoeyjk.cloudfront.net/ucanapply/PIY0000075/2023/notification/ksu_231229182424_721.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment