சேலம் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிர்வாகி, முதன்மை ஆலோசகர், தொழில்நுட்ப வல்லுநர், வழக்குப் பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
மைய நிர்வாகி
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Master of Social Work (MSW), M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / Clinical Psychology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 23 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 30,000
முதன்மை ஆலோசகர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Master of Social Work (MSW), M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / Clinical Psychology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 23 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,000
தொழில்நுட்ப வல்லுநர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.Sc., B.E., (Computer Science ) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
வழக்குப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி : Master of Social Work (MSW), M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / Clinical Psychology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,000
காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000
பல்நோக்கு உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 6,400
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் சேலம் மாவட்ட சமூக நலத்துறைக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.11.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2023/10/2023102629.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.