/indian-express-tamil/media/media_files/VaYOuj0YRsTcBczgoFXe.jpg)
சாராபாய் கலாம் அரங்கு திறக்கப்பட்டது.
Sarabhai Kalam Hall in Coimbatore : கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் சாராபாய் கலாம் என்ற பிரம்மாண்ட அரங்கின் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த அரங்கில் மேம்படுத்தப்பட்ட ஆடியோ, காட்சி தொழில்நுட்பம், உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட ஒலியியல் விளக்கு அம்சங்கள், எல்.இ.டி சுவர் ஆகியவை உள்ளன.
மேலும், அரங்கில் சிம்போசியம் மூலமாக அதிநவீன உச்சி மாநாடு மற்றும் நாடக நிகழ்ச்சிகளை நடத்த முடியும். இது, 12 ஆயிரம் சதுர அடியில் சுமார் 450 பேர் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இதனை, இஸ்ரோ-வின் முன்னாள் அறிவியல் செயலாளர் ஒய்.எஸ் ராஜன், ககன்யான் ஆலோசனை குழுவின் மூத்த உறுப்பினர் ராகேஷ் சர்மா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இது, கல்லூரி மாணவ- மாணவியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
செய்தியாளர் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.