Advertisment

SBI recruitment; எஸ்பிஐ அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு; 6100 காலியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

SBI recruitment 2021: Applications invited for 6100 posts: பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு, கிளர்க் பணியிடங்களுக்கான தேர்வு முறையில் முன்னுரிமை அளிக்கப்படும்

author-image
WebDesk
New Update
SBI recruitment; எஸ்பிஐ அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு; 6100 காலியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

SBI apprentice recruitment 2021: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) 6100 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் sbi.co.in இல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய விண்ணப்ப செயல்முறை ஜூலை 26 அன்று முடிவடையும்.

Advertisment

இந்த பயிற்சி பதவிகளில் தமிழகத்தில் மொத்தம் 90 காலியிடங்கள் உள்ளன. இதில் மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி பதவிகளுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைன் எழுத்துத் தேர்வு 2021 ஆகஸ்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இன்னும் சரியான தேதி வெளியிடப்படவில்லை.

ஆன்லைன் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தாங்கள் விண்ணப்பித்த மாநிலத்தின் உள்ளூர் மொழி தகுதித் தேர்வை எழுத வேண்டும். மேலும், மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு பயிற்சி பெற பணியமர்த்தப்படுவார்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வங்கியில் மூன்று வருட காலப்பகுதியில் பயிற்சி பெற்றவர்கள் ஐ.ஐ.பி.எஃப் தேர்வில் தகுதி பெற வேண்டும். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் அண்ட் ஃபைனான்ஸ் (ஐ.ஐ.பி.எஃப்) என்பது ஒரு ‘தொலைதூரக் கல்வி’ நிறுவனம் ஆகும்.

தகுதிகள்

வயதுத் தகுதி

விண்ணப்பதாரர் 31.10.2020 அன்று 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆரம்பத் தேதி 06.07.2021 ஆகவும் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 26.06.2021 ஆகவும் எஸ்பிஐ ஆல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.300 ஆக உள்ளது. SC/ST, PWD, பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு முறை:

இதில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் வட்டார மொழி தகுதித் தேர்வு என இரண்டு படிநிலைகள் உண்டு. இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் தேர்வுகளாக மட்டுமே நடைபெறும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம், திறனறிதல், கணிதம் மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 1 மணி நேரம் மட்டுமே.

ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்குப் பின் வட்டார மொழி தகுதித் தேர்வு நடைபெறும். தேர்ச்சி பெற்றவர்கள், அதன்பின் பயிற்சிக்கு பணியமர்த்தப்படுவார்கள். இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு, கிளர்க் பணியிடங்களுக்கான தேர்வு முறையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sbi Bank Sbi Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment