/tamil-ie/media/media_files/uploads/2020/11/image-89.jpg)
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில், 2,000 புரோபேஷனரி அதிகாரி (பிஓ) பதவிகளுக்கான இடங்கள் நிரப்பப்படுகின்றன.
டிசம்பர் 4ம் தேதி வரை, அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.inயில் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் எண்ணிக்கை: 2000
முக்கிய தேதிகள்
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் - நவம்பர் 14
சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – டிசம்பர் 4
யார் விண்ணபிக்கலாம்: 04.04.2020 அன்று 30 வயது தாண்டாமலும், 21 வயதை நிறைவு செய்த மாணவகளும் விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீடு மானவர்களுக்குய் உயர் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பை விண்ணப்தாரர்கள் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்ப்படும் முறை: முதல்நிலை , முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல்நிலைத் தேர்வு தேதி: நாடு முழுவதும் டிசம்பர் 31 முதல் நான்கு தேதிகளில் ப்ரிலிம்ஸ் தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும்.
விண்ணப்ப முறை: https://bank.sbi/careers என்ற இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்வது மிக நல்லது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.