Advertisment

எஸ்.பி.ஐ வங்கிகளில் 2,000 பி.ஒ இடங்கள் : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

SBI PO latest news : முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்

author-image
WebDesk
Nov 18, 2020 14:52 IST
New Update
எஸ்.பி.ஐ  வங்கிகளில் 2,000 பி.ஒ இடங்கள் : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில், 2,000 புரோபேஷனரி அதிகாரி (பிஓ) பதவிகளுக்கான இடங்கள் நிரப்பப்படுகின்றன.

Advertisment

டிசம்பர் 4ம் தேதி வரை, அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.inயில் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 2000

முக்கிய தேதிகள்

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் - நவம்பர்  14

சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – டிசம்பர் 4

யார் விண்ணபிக்கலாம்:  04.04.2020 அன்று 30 வயது தாண்டாமலும், 21 வயதை நிறைவு செய்த மாணவகளும் விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீடு மானவர்களுக்குய் உயர் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பை விண்ணப்தாரர்கள் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்ப்படும் முறை: முதல்நிலை , முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

முதல்நிலைத் தேர்வு தேதி: நாடு முழுவதும் டிசம்பர் 31 முதல் நான்கு தேதிகளில் ப்ரிலிம்ஸ் தேர்வு ஆன்லைன் மூலம்  நடைபெறும்.

விண்ணப்ப முறை: https://bank.sbi/careers  என்ற இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்வது மிக நல்லது.

#Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment