Advertisment

SBI Clerk Prelims Exam 2019: எஸ்பிஐ கிளரிக்கல் முதனிலை தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட்டை பார்ப்பது எப்படி

Check SBI Clerk Prelim Exam Results At sbi.co.in: முதனிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி, பிரதான (main) தேர்வு நடைபெற உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, வங்கி அனைத்து வாடிக்கையாளர்களின் KYC விபரங்களை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, வங்கி அனைத்து வாடிக்கையாளர்களின் KYC விபரங்களை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும்.

SBI Clerk Result 2019: நாட்டின் பொதுத்துறை வங்கிகளும் முதன்மையானதான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள கிளரிக்கல் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான முதனிலை (prelims) தேர்வு, கடந்த ஜூன் மாதம் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற்றது. அதன்முடிவுகள் https://sbi.co.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisment

sbi, sbi exam, sbi clerical exam, state bank of india sbi, sbi exam, sbi clerical exam, state bank of india

எஸ்பிஐ கிளரிக்கல் முதனிலை தேர்வு, 100 மதிப்பெண்களை கொண்ட தேர்வாக கடந்தா ஜூன் மாதம் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற்றது. 60 நிமிடங்கள் கால அளவு கொண்டதான இந்த தேர்வில், ஒரு மதிப்பெண் என்ற வீதத்தில் 100 கேள்விகள் இடம்பெற்றன. இவற்றில் ஆங்கிலத்தில் இருந்து 30 கேள்விகளும், நியூமரிக்கல் எபிலிட்டி பகுதியிலிருந்து 35 கேள்விகளும், ரீசனிங் எபிலிட்டி பகுதியிலிருந்து 35 கேள்விகளும் இடம்பெற்றன.

How to check results - ரிசல்ட்டை பார்க்கும் வழிமுறை

1. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.co.in/ பக்கத்திற்கு செல்லவும்.

2. அதில், ‘clerk prelims results’ என்ற பகுதியை தேர்ந்தெடுக்கவும்.

3. அதில் ஓபன் ஆகும் பக்கத்தில், தங்களது பதிவு எண் / பிறந்த தேதி உள்ளிட்டவற்றை பதிவிடவும்

4.. தேர்வு முடிவுகள் / ரிசல்ட் திரையில் தெரியும்.

5. அதை டவுன்லோடு செய்து, பிரின்ட் அவுட் எடுத்து அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும்.

sbi, sbi exam, sbi clerical exam, state bank of india sbi, sbi exam, sbi clerical exam, state bank of india

முதனிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி, பிரதான (main) தேர்வு நடைபெற உள்ளது.

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment