scorecardresearch

SBI Clerk 2019: எஸ்.பி.ஐ 8904 கிளர்க் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க மே 3 கடைசி நாள்

அந்த மாநில மொழியில் நன்றாக பேசவும், படிக்கவும், எழுதவும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். 

SBI Clerk 2019: எஸ்.பி.ஐ 8904 கிளர்க் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க மே 3 கடைசி நாள்

SBI Clerk 2019 : ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா எனப்படும் எஸ்.பி.ஐ வங்கியில், கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்கும் நாள் இறுதி நிலையை எட்டியிருக்கிறது.

மொத்தம் 8,904 காலியிடங்களைக் கொண்ட இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதற்கான கடைசி தேதி மே 3, 2019.

இந்தப் பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு ஜூன் 2019-ல் நடக்கவிருக்கிறது. இருப்பினும் தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க sbi.co.in என்ற தளத்தை விசிட் செய்யவும்.

தகுதியும் வரம்பும்

இதற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அந்தந்த மாநிலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

அப்படி விண்ணப்பிக்கும் போது அந்த மாநில மொழியில் நன்றாக பேசவும், படிக்கவும், எழுதவும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

ஒருவரால் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ஆன்லைன் டெஸ்ட், முதன்மை தேர்வு, மெயின் தேர்வு ஆகியவற்றிற்கு பிறகு விண்ணப்பதாரர் ஜூனியர் அசோசியேட்டாக பணியமர்த்தப்படுவார்.

 

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Sbi clerk 2019 jobs registration ends on may 3 check at sbi co in