Advertisment

SBI Clerk Recruitment 2021; 5237 பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் தேதி மே 20 வரை நீட்டிப்பு

SBI Clerk Recruitment 2021 Registration Last Date Extended: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), ஜூனியர் அசோசியேட்ஸ் (வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை) பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்து அறிவித்துள்ளது

author-image
WebDesk
New Update
sbi pension seva

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), ஜூனியர் அசோசியேட்ஸ் (வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை) பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்து அறிவித்துள்ளது. இதேபோல் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்துவதற்கான தேதியையும் நீட்டித்துள்ளது. தற்போது விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மே 20 ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். முன்னதாக இந்த காலிபணியிடங்களுக்கான விண்ணப்பத்திற்கு மே 17 ஆம் தேதியை கடைசி தேதியாக எஸ்பிஐ அறிவித்திருந்த நிலையில் இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஜூனியர் அசோசியேட்ஸ் (வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை) ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://sbi.co.in இல் வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிப்பதோடு, EWS பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு, "வருமானம் மற்றும் சொத்து சான்றிதழுக்கான" புதிய வழிகாட்டுதல்களையும் அறிவித்துள்ளது.

முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற EWS பிரிவைச் சேர்ந்தவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, தற்போதுள்ள டிஓபிடி வழிகாட்டுதல்களின்படி, சம்பந்தப்பட்ட நிதியாண்டிற்கான,  'வருமானம் மற்றும் சொத்து சான்றிதழை' சமர்பிக்க வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட நிதியாண்டிற்கான 'வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ்' தேர்வரால் ஆவண சரிபார்ப்பு தேதியில் அல்லது அதற்கு முன்னதாக பெறப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்கலாம். 'வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ்' பெறுவதற்கான நேரத்தை நீட்டிக்க கோரிக்கை இல்லை அதனால் முந்தைய தேதியே தொடரும். ஒருவேளை, சான்றிதழ் சரிபார்க்கப்படும் தேதியில் ஒரு தேர்வர் 'வருமானம் மற்றும் சொத்து சான்றிதழை' சமர்ப்பிக்க தவறினால், ஜூனியர் அசோசியேட்ஸ் (வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை) பதவிக்கு வங்கியால் நியமனம் செய்யப்பட மாட்டார்கள்.

ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள், அந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் உள்ளூர் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது அந்த மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வட்டார மொழி தகுதித் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கே வேலை கிடைக்கும்.

ஜூனியர் அசோசியேட்ஸ் காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://bank.sbi/careers OR https://www.sbi.co.in/careers  என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதிகள்:

வயதுத் தகுதி:

விண்ணப்பதாரர் 01.04.2021 அன்று 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கல்லூரி இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் 16.08.2021க்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆரம்பத் தேதி 27.04.2021 ஆகவும் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 20.05.2021 ஆகவும் எஸ்பிஐ ஆல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு முறை:

இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் வட்டார மொழி தகுதித் தேர்வு மூன்று படிநிலைகள் உண்டு. இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.

முதல்நிலைத் தேர்வு:

முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language),  திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 1 மணி நேரம். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வு:

முதன்மைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம், திறனறிதல் மற்றும் கணிதம் மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) என மொத்தம் 190 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம் 40 நிமிடங்கள். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலே வேலை கிடைக்கும். இந்த முதன்மைத் தேர்வுகள் 31.07.2021 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் வட்டார மொழி தகுதித் தேர்வு நடைபெறும். பின்னர் இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sbi Sbi Bank Sbi Recruitment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment