எஸ்.பி.ஐயில் கொட்டிக் கிடக்கும் வேலை… ஜூனியர் அசோசியேட்ஸ் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

SBI Customer Support and Sales Jobs :

sbi jobs 2020, sbi clerk, SBI Clerk Recruitment 2020,
State Bank Of India NetBanking, State Bank Of India ATM, State Bank Of India Online, எஸ்பிஐ, எஸ்.பி.ஐ வங்கி

SBI Jobs 2020 :  எஸ்.பி.ஐ வங்கியில் இருக்கும் 8 ஆயிரம் ஜூனியர் அசோசியேட் வேலைகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று அந்த வங்கி அறிவித்துள்ளது.  ப்ரிலிமினரி மற்றும் மெய்ன்ஸ் மூலமாக பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ப்ரிலிமினரி தேர்வுகள் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திலும், மெய்ன் தேர்வுகள் ஏப்ரல் மாதத்திலும் நடத்தப்படும்.

தேர்வர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பினை தேர்ச்சி செய்திருக்க வேண்டும். இறுதி தேர்வு முடிவுகளுக்கு காத்திருக்கும் நபர்கள் தங்களின் ப்ரொவிஷ்னல் சான்றிதழ்கள் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். தேர்வர்களின் வயது வரம்பு 20 முதல் 28 வரை இருக்க வேண்டும்.

இந்த பதவிக்கு நீங்கள் விண்ணப்பிக்க இந்த  இணைப்பை க்ளிக் செய்யுங்கள் : https://ibpsonline.ibps.in/sbijassdec19/

Preliminary Exams

ஆங்கிலம், நியூமரிக்கல் அபிலிட்டி, மற்றும் ரீசனிங் அபிலிட்டி ஆகியவற்றில் இருந்து ப்ரிலிமினரி தேர்வில் கேள்விகள் கேட்கப்படும். கேட்கப்படும் நூறு கேள்விகளுக்கு 1 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும். இதற்கான அட்மிட் கார்டுகள் பிப்ரவரி 11ம் தேதி வெளியாகிறது.

Mains

இந்த தேர்வில் மொத்தம் 190 கேள்விகள் கேட்கப்படும். 2 மணி நேரம் 40 நிமிடங்களில் இந்த கேள்விகளுக்கு தேர்வர்கள் பதில் அளிக்க வேண்டும், இதற்கான அட்மிட் கார்டுகள் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் வழங்கப்படும். இந்த தேர்வு ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. வங்கி லோன்கள், க்ரெடிட் கார்ட் மற்றும் சிபில் புள்ளிகளில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கும் தேர்வர்கள், இந்த தேர்வுகளில் வெற்றி பெற்றாலும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டார்கள்.

மேலும் படிக்க : TNPSC Annual Planner 2020: புத்தாண்டில் தமிழக அரசு வேலை வாய்ப்பு பட்டியல்

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi clerk recruitment 2020 sbi junior associates vacancy sbi jobs bank jobs

Next Story
75% சதவீதம் கட்டாய வருகை தேவை, இல்லையேல்…. சிபிஎஸ்இ அதிரடிcbse board exam, coronavirus responsibilities
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express