Advertisment

SBI Clerk Result 2019: எஸ்.பி.ஐ கிளர்க் தேர்வு எழுதியவர்களுக்கு ’ரிசல்ட்’ எப்போது?

SBI Clerk Result for Prelims to be Released Soon: இத்தேர்வை எழுதியவர்கள் sbi.co.in என்ற தளத்தை விசிட் செய்யவும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடையும் விண்ணப்பதாரர்கள், மெயின் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi clerk 2019 result, sbi clerk result 2019, ஸ்டேட் வங்கி கிளார்க் தேர்வு ரிசல்ட், sbi careers

sbi clerk 2019 result, sbi clerk result 2019, ஸ்டேட் வங்கி கிளார்க் தேர்வு ரிசல்ட், sbi careers

SBI Clerk Result 2019 for Prelims Expected Soon: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா எனப்படும் எஸ்.பி.ஐ வங்கியில் கிளர்க் பணியிடங்களுக்கான முதல் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தேர்வை எழுதியவர்கள் sbi.co.in என்ற தளத்தை விசிட் செய்யவும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடையும் விண்ணப்பதாரர்கள், மெயின் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

Advertisment

இந்தாண்டு ஜூன் 22, ஜூன் 23 மற்றும் ஜூன் 30 ஆகிய தேதிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எஸ்.பி.ஐ கிளார்க் தேர்வை நடத்தியது.

How to check sbi clerk result 2019 prelims: தேர்வு முடிவை எப்படி தெரிந்துக் கொள்வது?

sbi.co.in என்ற இணையதளத்தை விசிட் செய்யவும்.

எஸ்.பி.ஐ கிளர்க் ரிசல்ட் என்பதை க்ளிக் செய்யவும்.

புதிய விண்டோ திறக்கும்.

உங்களது ஐ.டி மற்றும் பாஸ்வேர்டை வைத்து லாகின் செய்துக் கொள்ளுங்கள்.

ரோல் நம்பர், பதிவெண் போன்ற முக்கிய விஷயங்களை சமர்பிக்கவும்.

உங்களுடைய எஸ்.பி.ஐ கிளர்க் தேர்வின் முடிவுகள் திரையில் தோன்றும்.

அதனை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

இது எதற்காக?

எஸ்.பி.ஐ கிளர்க்கின் முதல்நிலை தேர்வு முடிவுகள், விண்ணப்பதாரரின் மதிப்பெண்கள், தேவையான குறைந்தபட்ச கட் ஆப் மதிப்பெண்கள் மற்றும் தகுதி போன்ற விபரங்களைக் கொண்டிருக்கும் என்பதை விண்ணப்பதாரர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

எஸ்.பி.ஐ மெயின் தேர்வு

முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடையும் விண்ணப்பதாரர்கள், மெயின் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். எஸ்.பி.ஐ கிளர்க்கின் மெயின் தேர்வு 2019 ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு முதலில் ஆவண சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்கள் ஆஜராக வேண்டும், பின்னர் இறுதி ஒதுக்கீடு வெளியிடப்படும்.

மதிப்பெண்

எஸ்.பி.ஐ கிளர்க் தேர்வு இரண்டு கட்டங்களில் நடைபெறுகிறது. முதல்நிலை  மற்றும் மெயின்கள். இதில் முதல்நிலை தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்களுக்கும், மெயின்ஸ் தேர்வு மொத்தம் 200 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படுகிறது.

காலியிடங்கள்

இந்தாண்டு, எஸ்.பி.ஐ கிளர்க் தேர்வு மொத்தம் 8693 காலியிடங்களுக்கு நடைபெறுகிறது.

Exam Result Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment