SBI PO 2021; பட்டப் படிப்பு தகுதி; எஸ்பிஐ-ல் 2056 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

SBI invites application for 2056 Probationary officers vacancies apply soon: வங்கி வேலை வேண்டுமா? எஸ்பிஐ வங்கியில் 2056 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. அதுவும் பட்டப்படிப்பு தகுதிக்கு அசிஸ்டெண்ட் மேனேஜர் ஆகலாம். விருப்பமுள்ளவர்கள் எஸ்பிஐ வங்கியின் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ப்ரோபேசனரி ஆபிஸர் (PROBATIONARY OFFICERS) அல்லது அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 2,056 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகளுக்கான ஆரம்ப அடிப்படை ஊதியம் ரூ. 41,960 ஆக உள்ளது.

PROBATIONARY OFFICERS

தகுதிகள்:

வயதுத் தகுதி:

விண்ணப்பதாரர் 01.04.2021 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கல்லூரி இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் 31.12.2021 க்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆரம்பத் தேதி 05.10.2021 மற்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 25.10.2021.

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

இத முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.

முதல்நிலைத் தேர்வு:

முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language),  திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் என மொத்தம் 1 மணி நேரம். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வு:

முதன்மைத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் கொள் குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (35), திறனறிதல் (45), கணிதம் (35) மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial/Banking Awareness) (40) என மொத்தம் 155 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம்.

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் பகுதியான விரிவாக எழுதுதல் தேர்வு நடைபெறும். இதில் கட்டுரை அல்லது கடிதல் எழுதுதல் தொடர்பாக இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். 50 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெறும். இதற்கான கால அளவு 30 நிமிடங்கள். இந்த முதன்மைத் தேர்வுகள் டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு 2022 பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://sbi.co.in/documents/77530/11154687/041021-Final+Advertisement+PO+21-22.pdf/61eb5452-c5e8-e057-e460-1e89486812d8?t=1633349820829 என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi invites application for 2056 probationary officers vacancies apply soon

Next Story
அரசு மருத்துவமனையில் பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; விவரங்கள் இதோ…
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X