scorecardresearch

SBI Jobs; எஸ்பிஐ வங்கியில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள்; உடனே அப்ளை பண்ணுங்க!

SBI recruitment 2021 various manager jobs apply soon: எஸ்பிஐ வேலைவாய்ப்பு; மேனேஜர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளர் மற்றும் உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.10.2021

மேலாளர் – சந்தைப்படுத்தல் (Manager – Marketing)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வித் தகுதி : சந்தைப்படுத்தல் (Marketing) அல்லது நிதி (Finance) உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் MBA படித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 01.07.2021 அன்று 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 63,840 – 78,230

உதவி மேலாளர் – சந்தைப்படுத்தல் (Deputy Manager – Marketing)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 26

கல்வித் தகுதி : சந்தைப்படுத்தல் (Marketing) அல்லது நிதி (Finance) உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் MBA படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 01.07.2021 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 48,170 – 69,810

மேலாளர் Relationship Manager

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 314

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 01.08.2021 அன்று 23 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : வருடத்திற்கு ரூ. 6 – 15 லட்சம்

மேலாளர் Relationship Manager (Team Lead)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 8 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 01.08.2021 அன்று 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : வருடத்திற்கு ரூ. 10 – 28 லட்சம்

Customer Relationship Executive

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 217

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.08.2021 அன்று 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : வருடத்திற்கு ரூ. 2 – 3 லட்சம்

Investment Officer

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 01.08.2021 அன்று 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : வருடத்திற்கு ரூ. 12 – 18 லட்சம்

Central Research Team (Product Lead)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி : MBA படித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 01.08.2021 அன்று 30 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : வருடத்திற்கு ரூ. 25- 45 லட்சம்

Central Research Team (Product Lead)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி : MBA படித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 01.08.2021 அன்று 30 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : வருடத்திற்கு ரூ. 25- 45 லட்சம்

Central research Team (Support)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி : இளங்கலை கணிதம் அல்லது வணிகவியல் அல்லது பொருளாதாரம் படித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 01.08.2021 அன்று 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : வருடத்திற்கு ரூ. 7- 10 லட்சம்

தேர்வு செய்யப்படும் முறை : Manager – Marketing மற்றும் Deputy Manager – Marketing பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும். எழுத்து தேர்வு நடைபெறும் நாள் 15.11.2021

மற்ற பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://bank.sbi/careers  அல்லது  https://www.sbi.co.in/careers என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.10.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://sbi.co.in/documents/77530/11154687/270921-Advt.+SCO-15of2021-22.pdf/b2d4badf-9910-c82c-cf39-8dd6c43b757c?t=1632745940353 மற்றும் https://sbi.co.in/documents/77530/11154687/270921-Ad+No.-17.pdf/bb04f10b-9347-4576-69ec-c4eba6cc7ab9?t=1632745625542 என்ற இணையதள பக்கங்களைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Sbi recruitment 2021 various manager jobs apply soon