வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. அதுவும் பொறியியல் படித்தவர்கள் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஆகலாம். விருப்பமுள்ளவர்கள் எஸ்.பி.ஐ வங்கியின் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 45 வகையான பதவிகளில் மொத்தம் 439 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.10.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்
Assistant Manager
காலியிடங்களின் எண்ணிக்கை : 439
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E/B. Tech in (Computer Science/ Computer Science & Engineering/ Information Technology / Electronics/ Electronics & Communications Engineering/ Software Engineering or MCA or M. Tech/ M.Sc. in (Computer Science/ Computer Science & Engineering/ Information Technology/ Electronics/ Electronic & Communications Engineering படித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 30.04.2023 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.
சம்பளம்: ரூ, 36,000 – 1,00,000 பதவிகளுக்கு ஏற்ப சம்பள அளவு மாறுபடும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
இப்போது உங்களுக்கு விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல் கொடுக்கப்படும். அதனைக் கொண்டு உள்நுழைந்து புகைப்படம் மற்றும் கையொப்பத்தைத் பதிவேற்றவும்.
பின்னர் உங்கள் தனிபட்ட விவரங்கள், கல்வி விவரங்கள் உள்ளிட்டவற்றை உள்ளிடவும்.
அடுத்ததாக கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.sbi.co.in/documents/77530/36548767/160923-1-FINAL+Detailed+Advertisement+CRPD+SCO+14+GITC+439.pdf/6ec39741-fd38-5cff-35b8-77991f2b857e?t=1694853883100 என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.