ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) 6160 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் sbi.co.in இல் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி பணியிடங்களில் தமிழகத்தில் மொத்தம் 648 காலியிடங்கள் உள்ளன. ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் 21.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வேலை; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!
SBI APPRENTICES
காலியிடங்களின் எண்ணிக்கை : 6160
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 01.18.2023 அன்று 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.
சம்பளம் : ரூ. 15,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பயிற்சி பதவிகளுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் வட்டார மொழி தகுதித் தேர்வு என இரண்டு படிநிலைகள் உண்டு. இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு: ஆன்லைன் எழுத்துத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம், திறனறிதல், கணிதம் மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 1 மணி நேரம் மட்டுமே.
ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்குப் பின் வட்டார மொழி தகுதித் தேர்வு நடைபெறும். தேர்ச்சி பெற்றவர்கள், அதன்பின் பயிற்சிக்கு பணியமர்த்தப்படுவார்கள். இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு, கிளர்க் பணியிடங்களுக்கான தேர்வு முறையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://sbi.co.in/web/careers/current-openings அல்லது https://ibpsonline.ibps.in/sbiaaug23/ என்ற இணையதளப் பக்கங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.300 ஆக உள்ளது. SC/ST, PWD, பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.09.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://sbi.co.in/documents/77530/36548767/310823-ENGAGEMENT+OF+APPRENTICE+2023+ADVERTISEMENT+CRPD_APPR_2023-24_17.pdf/fb7c7b06-3c72-4c55-cd2b-1c9bbc0307ce?t=1693485209035 என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.