Advertisment

எஸ்.பி.ஐ வேலை வாய்ப்பு; 150 பணியிடங்கள்; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

SBI recruitment 2025; வங்கி வேலை வேண்டுமா? எஸ்.பி.ஐ வங்கியில் 150 பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI billed govt Rs 10.68 crore as commission For electoral bonds Tamil News

வங்கியில் வேலை பார்க்க ஆசையா? இதோ அருமையான வாய்ப்பு. அதுவும் பட்டப்படிப்பு தகுதிக்கு வர்த்தக நிதி அதிகாரி ஆகலாம். விருப்பமுள்ளவர்கள் எஸ்.பி.ஐ வங்கியின் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வர்த்தக நிதி அதிகாரி (Trade Finance Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 150 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.01.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Trade Finance Officer 

காலியிடங்களின் எண்ணிக்கை: 150

Advertisment
Advertisement

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மற்றும் Forex by IIBF சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 31.12.2024 அன்று 23 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம்: ரூ. 64820-2340/1-67160-2680/10-93960

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நிரப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.sbi.co.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.01.2025

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Sbi Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment