SBI PO 2025; எஸ்.பி.ஐ வங்கி வேலை வாய்ப்பு; 541 பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

வங்கி வேலை வேண்டுமா? எஸ்.பி.ஐ வங்கியில் 541 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வங்கி வேலை வேண்டுமா? எஸ்.பி.ஐ வங்கியில் 541 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
sbi

SBI PO 2025: வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. அதுவும் பட்டப்படிப்பு தகுதிக்கு அசிஸ்டெண்ட் மேனேஜர் ஆகலாம். விருப்பமுள்ளவர்கள் எஸ்.பி.ஐ வங்கியின் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ப்ரோபேசனரி ஆபிஸர் (PROBATIONARY OFFICERS) அல்லது அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 541 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

PROBATIONARY OFFICERS

காலியிடங்களின் எண்ணிக்கை: 541

Advertisment
Advertisements

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கல்லூரி இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் 30.09.2025க்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.04.2025 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது வரம்பில் சலுகை உண்டு.

சம்பளம்: அடிப்படை சம்பளம் ரூ. 48,480, ஆண்டுக்கு ரூ. 20.43 லட்சம்

தேர்வு செய்யப்படும் முறை: இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.

முதல்நிலைத் தேர்வு: 

முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் என மொத்தம் 1 மணி நேரம். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வு: 

முதன்மைத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் கொள் குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (40), திறனறிதல் (40), கணிதம் (30) மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial/Banking Awareness) (60) என மொத்தம் 170 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம். 

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் பகுதியான விரிவாக எழுதுதல் தேர்வு நடைபெறும். இதில் கட்டுரை அல்லது கடிதல் எழுதுதல் தொடர்பாக இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். 50 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெறும். இதற்கான கால அளவு 30 நிமிடங்கள். இந்த முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு 2025 அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 
https://sbi.co.in/web/careers/current-openings அல்லது https://ibpsonline.ibps.in/sbipomay25/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

இப்போது உங்களுக்கு விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல் கொடுக்கப்படும். அதனைக் கொண்டு உள்நுழைந்து புகைப்படம் மற்றும் கையொப்பத்தைத் பதிவேற்றவும்.

பின்னர் உங்கள் தனிபட்ட விவரங்கள், கல்வி விவரங்கள் உள்ளிட்டவற்றை உள்ளிடவும். அடுத்ததாக கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, ஓ.பி.சி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. எஸ்.சி, எஸ்.டி மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.07.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

Sbi Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: