Advertisment

எஸ்.பி.ஐ.யில் வேலை வாய்ப்பு... வருடத்திற்கு 15 லட்சம் சம்பளம்...

SBI SO Recruitment 2019 : அன்ரிசர்வ்ட் கேட்டகிரியில் வருபவர்களுக்கு 600 ரூபாய் விண்ணப்ப கட்டணம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI Clerk Result 2019 for Prelims Expected Soon:

SBI Special Officers Recruitment 2019 :  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் 31 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளம்.

Advertisment

விருப்பம் உள்ளவர்கள் sbi.co.in. இணையத்தில் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்ய கடைசி நாள் ஜனவரி 31ம் தேதி ஆகும்.

ஸ்பெசல் ஆபிசர் கேடரில் பூர்த்தி செய்யப்பட இருக்கும் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், முறையான சான்றிதழ்களை எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

என்னென்ன பணியிடங்கள் காலியாக உள்ளன ?

துணை மேலாளர் - 2 (புள்ளியியல் துறை)

ப்ரோஜெக்ட் டெவலப்மெண்ட் மேனேஜர் - அக்ரி கல்ச்சர், இண்டெர்நேசனல் பேங்கிங்,  ரீட்டைல், கார்ப்பரேட் பேங்கிங் துறையில் - 3

டிஜிட்டல் சர்வீசிங் மேனேஜர்  - 3

பிசினஸ் அனலிஸ்ட் / கஸ்டமர் சர்வீஸ் அனலிஸ்ட் மேனேஜர் - 3

மேனேஜர் (ஆன்லைன் ஃபுல்ஃபில்மெண்ட் / இண்டெக்ரேசன் மற்றும் ஜார்னி / சூப்பர்ஸ்டோர் ஃபுல்ஃபில்மெண்ட் ) - 3

மேனேஜர் (டிஜிட்டல் மார்க்கெட்டிங் ) - 4

ஹெட் (லீட்) - 1

டிஜிஎம் (என்.சி.எல்.டி) - 1

டி.ஜி.எம். (லா) - 1

எக்ஸ்கியூட்டிவ் (கிரெடிட் மானிட்டரிங்) -1 0

ஹெட் (ப்ரோடக்ட், இன்வெஸ்ட்மெண்ட், ரிசர்ச் ) - 1

சம்பளம் மற்றும் இதர தகவல்கள்

துணை மேலாளர் (statistician) பதவிக்கான ஆண்டு வருமானம் 15 லட்சம் ஆகும்.

மேலாளர் பதவிக்கான ஆண்டு வருமானம் 18 லட்சம் ஆகும்.

டி.ஜி.எம். பதவிக்கான ஆண்டு வருமானம் 35 லட்சம் முதல் 47 லட்சம் வரை

ஹெட் போஸ்டிங்கிறான சி.டி.சி. 47 லட்சம் - 52 லட்சம் வரை

மேலும் படிக்க : ஆர்.ஆர்.பி எஸ்.ஐ. தேர்வுகள் ஒத்திவைப்பு

SBI Special Officers recruitment 2019: விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறை

எஸ்.பி.ஐயின் அதிகாரப்பூர்வ இணையமான sbi.co.in க்கு செல்லவும்

ஹோம் பேஜ்ஜில் இருக்கும் கரியரை க்ளிக் செய்து ரெக்ரூட்மெண்ட் செல்லவும்

அதில் SBI SO cadre recruitment என்ற லிங்கை க்ளிக் செய்யவும்

அதில் உங்களின் தனிப்பட்ட விபரங்களை தரவும்

சான்றிதழ்களை அப்லோட் செய்யவும்

விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தினை மேற்படி தேவைகளுக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்

அன்ரிசர்வ்ட் கேட்டகிரியில் வருபவர்களுக்கு 600 ரூபாய் கட்டணம்

பழங்குடி / பட்டியல் இனத்தவர்களுக்கு ரூ. 100

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment