/tamil-ie/media/media_files/uploads/2020/07/5-44.jpg)
sbi savings account interest sbi savings account sbi
SBI Tamil News, SBI recruitment @sbi.co.in: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வட்டம் நிலையிலான அதிகாரி(Circle Based Officers) பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .
ஆகஸ்ட் 16 வரை, அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.inயில் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் எண்ணிக்கை 3850
Here’s great news for all job seekers! SBI is hiring aspiring bank officers in various states across the country. Apply now: https://t.co/xXxlZdZk3G#Recruitment#Hiring#SBI#StateBankOfIndiapic.twitter.com/cNuhtewST7
— State Bank of India (@TheOfficialSBI) August 6, 2020
தனது ட்விட்டர் கணக்கில்"வேலை தேடுவோர் அனைவருக்கும் ஒரு சிறந்த செய்தி! எஸ்பிஐ நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், ஆர்வமுள்ள வங்கி அதிகாரிகளை பணியமர்த்துகிறது" என்று அதன் ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டது.
பணியிடங்கள்: தமிழ்நாடு, சென்னை வட்டத்தில் 550 அதிகாரிகளை எஸ்.பி.ஐ நிரப்ப உள்ளது. மாத ஊதியமாக மாதத்திற்கு 23,700 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தது.
முக்கிய தேதிகள்
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் -ஜூலை 27
சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி - ஆகஸ்ட் 16
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி - ஆகஸ்ட் 16
விண்ணப்பக் கட்டணம்:
GEN/EWS &OBC பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 750;
SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.
SBI Recruitment: எஸ்பிஐ அதிகாரி வேலை
யார் விண்ணபிக்கலாம்:
01.08.2020 அன்று 30 வயது தாண்டாமலும், 02.08.1990-க்கு முந்தைய தேதிகளில் விண்ணப்தாரர்கள் பிறந்திருக்க கூடாது.
வயது வரம்பில் தளர்வுகள்:
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பை விண்ணப்தாரர்கள் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்ப்படும் முறை: ஷார்ட் லிஸ்ட்/நேர்காணல் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும், விவரங்களுக்கு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.