ரூ.20 லட்சம் வரை கல்வி உதவி தொகை: எஸ்.பி.ஐ. ஆஷா ஸ்காலர்ஷிப் 2025; யார் விண்ணப்பிக்கலாம்?

எஸ்.பி.ஐ. தனது பிளாட்டினம் ஜூபிலி ஆஷா உதவித்தொகை திட்டத்தின் கீழ், தகுதியுள்ள 23,230 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் 9ம் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை, ஆண்டுக்கு ரூ.15,000 முதல் ரூ.20 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும்.

எஸ்.பி.ஐ. தனது பிளாட்டினம் ஜூபிலி ஆஷா உதவித்தொகை திட்டத்தின் கீழ், தகுதியுள்ள 23,230 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் 9ம் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை, ஆண்டுக்கு ரூ.15,000 முதல் ரூ.20 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும்.

author-image
WebDesk
New Update
SBI’s Platinum Jubilee Asha Scholarship

ரூ.20 லட்சம் வரை கல்வி உதவித் தொகை: எஸ்.பி.ஐ. ஆஷா ஸ்காலர்ஷிப் 2025; யார் விண்ணப்பிக்கலாம்?

பாரத ஸ்டேட் வங்கியின் சமூகப் பொறுப்புணர்வுப் பிரிவான (CSR) எஸ்.பி.ஐ ஃபவுண்டேஷன், தனது பிளாட்டினம் ஜூபிலி ஆஷா உதவித்தொகை 2025 திட்டத்திற்கான விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு, இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள தகுதி உள்ள மற்றும் ஏழ்மையான குடும்பங்களை சேர்ந்த 23 ஆயிரத்து 230 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. மேலும், நாட்டின் இளம் திறமையாளர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் விதமாக, 2026 நிதியாண்டில் உதவித்தொகைக்காக ரூ.90 கோடி ஒதுக்கப்படும் என எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.

Advertisment

உதவித்தொகை விவரங்கள்

இந்த உதவித்தொகை திட்டம், 9-ம் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதல் ரூ.20,00,000 வரை நிதி உதவி கிடைக்கும். இந்த உதவித்தொகை, மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்பு முடியும் வரை வழங்கப்படும். இந்த உதவித்தொகை பல்வேறு பிரிவுகளில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

பள்ளி மாணவர்கள் (9-12 வகுப்புகள்)

என்.ஐ.ஆர்.எஃப் (NIRF) தரவரிசையில் முதல் 300 இடங்களிலுள்ள அல்லது NAAC ஏ தரச்சான்று பெற்ற கல்லூரிகளில் படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள்

ஐஐடி மற்றும் ஐஐஎம் நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள்

மருத்துவப் படிப்புகளைப் பின்தொடரும் மாணவர்கள்

வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள்

QS தரவரிசையில் முதல் 200 இடங்களிலுள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் முதுகலை மற்றும் உயர்கல்வி படிக்கும் SC/ST மாணவர்கள்

Advertisment
Advertisements

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் காலக்கெடு

விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். முந்தைய கல்வியாண்டில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் அல்லது 7.0 CGPA பெற்றிருக்க வேண்டும். பள்ளி மாணவர்களின் குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளும், கல்லூரி மாணவர்களின் குடும்ப வருமானம் ரூ.6 லட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி நவம்பர் 15. தகுதியுள்ள மாணவர்கள் sbiashascholarship.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், ஒவ்வொரு பிரிவுக்கான உதவித்தொகை விவரங்களையும் இணையதளத்தில் காணலாம்.

இந்த முயற்சி குறித்து பேசிய பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் சல்லா சீனிவாசலு செட்டி, "எங்கள் வங்கியின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டத்தைக் குறிக்கும் விதமாக, இந்த உதவித்தொகையைத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம், இந்தியாவின் மிகவும் திறமையான 23 ஆயிரத்து 230 இளம் minds-க்கு ஆதரவு அளித்து, அவர்களது கனவுகளை நனவாக்க உதவுவோம். இந்த மாணவர்களைச் சுற்றி வலுவான சூழலை உருவாக்குவதன் மூலம், 2047க்குள் 'விக்சித் பாரத்' என்ற தொலைநோக்கு பார்வைக்கு அவர்கள் பங்களிப்பார்கள் என்று நம்புகிறோம்" என்று கூறினார். அசிம் பிரேம்ஜி ஃபவுண்டேஷன் உதவித்தொகை 2025 என்ற மற்றொரு திட்டமும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.

Educational News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: