தகுதியுள்ள அனைத்து வெளிநாட்டு இந்திய குடிமக்களும் (OCI) இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு நீட் கவுன்சிலிங்கில் பங்கேற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த இடைக்கால உத்தரவு 2021-2022 கல்வியாண்டுக்கு மட்டுமே என்று நீதிபதிகள் எஸ் ஏ நசீர் மற்றும் கிருஷ்ணா முராரி அடங்கிய அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.
இதன் மூலம் இந்த கல்வியாண்டில், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பிற கல்லூரிகளில் எம்பிபிஎஸ் அல்லது பிடிஎஸ் படிப்புகள் மற்றும் பிற இளங்கலை அல்லது முதுகலை படிப்புகளில் சேர இந்திய குடிமக்களுக்கு இணையாக வெளிநாடு வாழ் இந்திய குடிமக்களும் மற்ற தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் பொது கவுன்சிலிங்கில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
நீட் தேர்வில் சேருவதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) இணையாக தங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று ஓசிஐ தேர்வர்கள் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதியிடம், தேசிய தேர்வு முகமை மற்றும் கவுன்சிலிங் அதிகாரிகள் இந்த உத்தரவை அமல்படுத்த கடமைப்பட்டுள்ளனர் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த அனுமதியை அணுகிய மனுதாரர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று பெஞ்சைக் கோரினார்.
"நாங்கள் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இது 2021-22 கல்வியாண்டுக்கு மட்டுமே என்பதை நாங்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம். இடைக்கால உத்தரவை நிறைவேற்றும் போது இந்த விஷயத்தை நாங்கள் நீண்ட காலமாகக் கேட்டு வருகிறோம். திடீர் என்று நாங்கள் இதைச் செய்தோம். எட்டு-ஒன்பது மாதங்களுக்கு முன்பே நீங்கள் அறிவிப்பை வெளியிட்டிருந்தால் நாங்கள் அத்தகைய உத்தரவை பிறப்பித்திருக்க மாட்டோம்" என்று பெஞ்ச் கூறியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil