மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 மாணவர்களுக்கான தேர்வு கட்டண விதிமுறையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, எஸ்சி/எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மற்றும் 12 மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை ஐம்பது மடங்குகளாக உயர்த்தியுள்ளது. அதாவது,ஐந்து பாடத்திற்கு ரூ .50-லிருந்த இவர்களுது தேர்வு கட்டணம் இந்த புது நடைமுறையால் ரூ.1200 என்று அதிகரிக்கும்.
அதே நேரத்தில்,பொது பிரிவினரின் தேர்வு கட்டணத்தை இரண்டு மடங்காக மாற்றி ரூ.1500-வாகவும் நிர்ணயித்துள்ளது.அதாவது, ஐந்து பாடத்திற்கு ரூ .750-லிருந்த இவர்களுது தேர்வு கட்டணம் இந்த புது நடைமுறையால் ரூ.1500 என்று அதிகரிக்கும்.
சிபிஎஸ்இ பள்ளிகள் இந்த கட்டண விதிமுறைகளை உடனே நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது, ஏற்கனவே தேர்வுக்கான கட்டணத்தை வசூலித்திருந்தாலும், மீதமுள்ள தொகையை உடனே அந்த மாணவர்களிடம் வசூலிக்க வேண்டும். மீதமுள்ள தொகையை மாணவர்கள் கடைசி நாளுக்குள் கட்டத் தவறினால்,2019-20 தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்” என்றும் சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்துள்ளது.
100 சதவீதம் பார்வையற்றோர் மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிகப்பட்டுளனர்.
வெளிநாடுகளில் சிபிஎஸ்இ தேர்வு எழுத பதிவு செய்துள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 5 பாடங்களுக்கு ₹10 ஆயிரம் செலுத்த வேண்டும். ஏற்கெனவே இந்த கட்டணம் ₹5 ஆயிரம் என இருந்தது குறிப்பிடத்தக்கது.