இந்தியாவில் பொறியியல் பட்டம் பெற சராசரியாக ரூ .8 முதல் 20 லட்சம் வரை செலவு ஆகுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் மாணவர்களுக்காக, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சிறப்பு உதவித்தொகை வழங்குகின்றன.
அதில் சிலவற்றை இங்கே காண்போம்
AICTE PG (GATE/GPAT) Scholarship : GATE/GPAT தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின்முதுகலை படிப்பை ஆதரிப்பதற்காக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. GATE/GPAT மதிப்பெண் வைத்திருக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு தகுதியுடையவர்கள். அவர்கள் AICTE அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ME / MTech / MPharma / MArch படிப்புகளின் முதல் ஆண்டில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.
வழங்குநர்: அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (யுஜிசி)
தகுதி: GATE/GPAT தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
உதவித் தொகை : மாதத்திற்கு ரூ .12,400 ,
விண்ணப்ப காலக்கெடு: ஜூலை முதல் செப்டம்பர் வரை
பிரதமரின் ஆராய்ச்சி உதவித் திட்டம்: இதன் கீழ் நாட்டின் தலைச் சிறந்த நிறுவனங்களில் மிகச் சிறந்த அறிவாற்றல் உள்ள ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுத்து ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி ஆகியவற்றில் பி.எச்டி பட்டப்படிப்புக்கு நேரடி சேர்க்கை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் தரமான ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படும், முன்னணி கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனை நீக்குவதற்காக இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது
வழங்குநர்: மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
தகுதி: பி.டெக் பட்டதாரி, இறுதி ஆண்டுபி.டெக் மாணவர்கள், ஒருங்கிணைந்த எம்.டெக், ஐ.ஐ.எஸ்.சி / ஐ.ஐ.டி / என்.ஐ.டிகளில் பயின்ற ஒருங்கிணைந்த எம்எஸ்சி மாணவர்கள்
உதவித் தொகை : மாதத்திற்கு 80,000 ரூபாய் வரை
விண்ணப்ப காலக்கெடு: ஒரு வருடத்தில் இரண்டு முறை (மே மற்றும் டிசம்பர் மாதங்களில்)
Keep India Smiling Foundation Scholarship Programme
பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் தகுதியான மாணவர்களின் மேற்படிப்பை ஆதரிக்கும் நோக்கில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 11 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளோமா, பி.இ, பி.டெக், தொழிற்கல்வி, அல்லது விளையாட்டு வீரர்கள், பிறருக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ரூ .5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
வழங்குநர்: Colgate-Palmolive (India) Ltd
தகுதி: 11 ஆம் வகுப்பு / பட்டப்படிப்பு / டிப்ளோமா / பிஇ / பிடெக் / தொழிற்கல்வி படிப்புகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மை உள்ள நபர்கள்
உதவித்தொகை: ஆண்டுக்கு ரூ .75,000 வரை
விண்ணப்ப காலக்கெடு: ஜனவரி மற்றும் ஜூலை இடையே
விண்ணப்ப முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
North South Foundation (NSF) Scholarship: பொறியியல், மருத்துவம் 3 வருட பாலிடெக்னிக் பொறியியல் டிப்ளோமா தொடர விரும்பும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எதிர்கால கல்விக்கு இந்த உதவித்தொகை ஆதரிக்கிறது.
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஆதரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உதவித்தொகை 10, 12, சி.இ.டி / நீட் / ஜே.இ.இ ஆகியவற்றில் தங்கள் மாநிலத்தில் முதல் 10 சதவீத தரவரிசையில் வந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் அனைத்து மூலங்களிலிருந்தும் ரூ .1,00,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
வழங்குநர்: North South Foundation (NSF) Scholarship
தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி
உதவித் தொகை : வாருடத்திற்கு 25,000 ரூபாய் வரை
விண்ணப்ப காலக்கெடு: அக்டோப்ர் முதல் நவமபர் வரை
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.