Advertisment

2021 - 22 கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் புதிய அறிவிப்பு : ஆசிரியர்கள் வரவேற்பு

CBSE Announced To New Terms : சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு 2021-22 கல்வி ஆண்டு இரண்டு பருவ காலமாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
2021 - 22 கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் புதிய அறிவிப்பு : ஆசிரியர்கள் வரவேற்பு

Tamil Nadu School Education Update : தமிழ்நாட்டில் உள்ள மாநில வாரிய பள்ளிகளின் ஆசிரியர்கள், நடப்பு கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலையில்,  2021-22 கல்வியாண்டில் பல்வேறு வடிவங்களில் பாடத்திட்டங்களைக் குறைத்தல் மற்றும் வாரியத் தேர்வுகளை இரண்டு முறை நடத்துவது தொடர்பான மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) அறிவிப்பு, மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற தன்மையையும் மன அழுத்தத்தையும் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல துறைகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், கல்வித்துறையும் பெருமளவில் சரிந்துள்ளது. சுமார் 2 வருடங்களாக பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடுங்கி கிடக்கின்றனர். தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில், விரைவில் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 2021-22 கல்வியாண்டில் பாடத்திட்டங்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு காலப்பகுதியிலும் 50% பாடத்திட்டங்கள் மட்டுமே நடத்தப்படும் என்றும், இதில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு காலப்பகுதியின் முடிவிலும் வாரிய தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  9 முதல் 12 வகுப்புகளுக்கும் தொடர்ச்சியான உள் மதிப்பீடுகள்  தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளியின் இந்த முடிவுக்கு பல தரப்பினரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஒரு இறுதி வாரிய தேர்வில் நிறைய நிச்சயமற்ற தன்மை இருந்ததால் அவர்களின் மன அழுத்தத்தை சந்தித்தனர். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் மணவர்களின் மன அழுத்தத்தை நிச்சயமாக குறைக்கும். இரண்டு தேர்வுகளுடன் இரண்டு கால முறை இருப்பது மாணவர்கள் என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தை புறக்கணிக்காமல் இருக்க வசதியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் முதல் காலபகுதி தேர்வு எம்சிகியூ (MCQ) களுடன் 90 நிமிட தேர்வாக இருக்கும் என்றும், இதில்  50% பாடத்திட்டங்களில் இருந்து வினாக்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்து.  வாரியத்தின் அனைத்து மதிப்பீடுகளுக்கும் மாணவர் சுயவிவரத்தை உருவாக்குவதும், சான்றுகளை டிஜிட்டல் வடிவத்தில் தக்கவைத்துக்கொள்வதும் வாரியத்தின் அறிவுறுத்தல்களில் அடங்கும் என்றும், பள்ளிகளில் இந்த மாற்றங்களை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதற்கான ஓரளவு ஆய்வு மற்றும் கண்காணிப்பு இருப்பதை உறுதி செய்யும்.

இதற்கிடையே தமிழ்நாட்டில் உள்ள மாநில வாரிய பள்ளிகளின் ஆசிரியர்கள் நடப்பு கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு, தமிழக அரசு மூத்த வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை கிட்டத்தட்ட 40% குறைத்தது. "பாடத்திட்டத்தை பகுத்தறிவு செய்வதோடு, இரண்டு கால முறையை கொண்டுவருவதும் மாணவர்களுக்கு பெரிதும் உதவும்,  என்றும் ஆசிரியர்கள் பலரும் கூறியுள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களிடையே உள்ள அச்சத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் போக்க சிபிஎஸ்இ ஏற்றுக்கொண்டதைப் போன்ற ஒரு செமஸ்டர் முறையை பரிசீலிக்குமாறு தமிழக ஆசிரியர் சங்கம் மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment