scorecardresearch

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் இவ்வளவு பணியிடங்கள்: நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்களா?

பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரிய அருமையான வாய்ப்பு; மொத்தம் 152 பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் இவ்வளவு பணியிடங்கள்: நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்களா?

School Education department invites application for Education Fellowship 2022 apply soon: பள்ளிக்கல்வித் துறையால் மேற்கொள்ளப்படும் புதுமையான முயற்சிகளுக்கு உதவும் வகையில், இளைஞர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணிகளுக்காக மொத்தம் 152 பேர் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் வேலைப்பார்க்க விரும்புபவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் வகையில், “இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், என் பள்ளி என் பெருமை” போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வித்துறையால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களுக்கு ஆதரவளிக்க, தமிழ்நாடு கல்வி ஊக்கத்தொகை திட்டம் (Tamil Nadu Education Fellowship) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர்ந்து அரசுடன் பணிபுரிய தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ப்படுகிறார்கள்.

இதையும் படியுங்கள்: எஸ்.ஐ. தேர்வில் புது மாற்றம்: தமிழ் திறனறிதலில் தேர்ச்சி கட்டாயம்

Senior Fellows

மொத்த இடங்களின் எண்ணிக்கை : 38

தகுதிகள் : இளங்கலை (அல்லது) முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். தமிழ் மொழியில் சரளமாக பேச, எழுத, படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். சமூக ஊடங்களைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 45,000

பணிகள் : விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், திட்ட ஆய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தல், திட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான பயிலரங்கை ஏற்பாடு செய்தல், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு டிஜிட்டல் கருவிகள் மூலம் உதவுதல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும்.

Fellows

மொத்த இடங்களின் எண்ணிக்கை : 114

தகுதிகள் : இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச, எழுத, படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 32,000

பணிகள்: அரசின் முன்னோடித் திட்டங்களை செயல்படுத்த துணைபுரிய வேண்டும். திட்டங்களை சமுதாய அளவில் கொண்டு செல்வதற்கு பல்வேறு தொலைதொடர்பு உத்திகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனை செயல்படுத்துவதற்கு துணை புரிய வேண்டும்.

அரசுப் பள்ளி தேவைகளை அடையாளம் காணுதல், கல்வித் தேவைகளை நிறைவேற்றுதல், கல்வித்தரத்தை உயர்த்துதல் போன்ற முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு டிஜிட்டல் கருவிகள் துணையுடன் உதவ வேண்டும்.

பணிக்காலம்: ஜூலை 2022 முதல் ஜூன் 2024 வரை இந்த திட்டத்தில் பணிபுரியலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் பணிக்காலத்தில் தாங்கள் பணிபுரியும், மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப பயணிக்க வேண்டும். பணிக்காலத்தில் தொடர் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், பணிக்காலம் முழுவதையும் வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அரசு சார்பில் அனுபவ சான்றிதழும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஏப்ரல் 22, முதல் ஜூன் 30, 2022 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform என்ற இணையதளப் பக்கம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://drive.google.com/file/d/1G74rYPsHcNij6—TsqeLZ5yJyI2ujXo/view என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: School education department invites application for education fellowship 2022 apply soon