/tamil-ie/media/media_files/uploads/2022/03/school-education-department.jpg)
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் அதே பள்ளியின் வேன் மோதி 2 ஆம் வகுப்பு படித்து வந்த தீக்சித் என்ற மாணவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், பள்ளி வாகனங்களை முறையாக பராமரித்து ஆண்டுதோறும் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்
பள்ளி பேருந்தில் மாணவர்களை இருப்பிடத்தில் இருந்து அழைத்து வரும் போது பஸ்சில் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும். அவர் மாணவர்களை பாதுகாப்பாக வாகனத்தில் இருந்து இறக்கி 4 புறமும் மாணவர்கள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்களை அழைத்து வரும் பள்ளி பேருந்துகள், ஆட்டோ ரிக்ஷாக்களில் பாதுகாப்பிற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றப்பட்டுள்ளதை பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் உறுதி செய்ய வேண்டும். அவற்றில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.
மாணவர்களை ஏற்றி, இறக்குவதற்கு டிரைவருடன் ஒரு உதவியாளரையும் வைத்திருக்க வேண்டும். வாகனத்தை ஓட்டும் போது சினிமா பாடல்களை ஒலிபரப்பக் கூடாது. மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லக் கூடாது.
டிரைவரின் குழந்தை, குடும்ப புகைப்படம் ஒன்றை அவரது இருக்கைக்கு எதிரில் பார்வையில் படும்படி வைக்கப்பட வேண்டும்.
அவசர தேவைக்கு முக்கியமான தொலைபேசி எண்களை பேருந்தினுள் மற்றும் வெளியே பார்வையில் தெரியும்படி எழுத வேண்டும். பள்ளி வாகனத்தை அதிகவேகத்தில் ஓட்டுதல், மது அருந்திவிட்டு ஓட்டுதல், உயிர் சேதம் விளைவிக்கும் ஆபத்தான முறையில் ஓட்டுதலில் ஒரு தடவை கூட டிரைவர் இருந்திருக்க கூடாது என குறிப்பிட்டுள்ளது.
மேலும், சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பள்ளிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இல்லையேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அறிவுறுத்தல்கள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா ? என்பதை தீவிரமாக கண்காணிப்படும் என தெரிவித்திருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us